புதுடெல்லி: Nykaa, Uber India, PayU, Flipkart, Zomato, Swiggy என பல இந்திய நிறுவனங்களின் முக்கிய தலைவர்களும் சீனாவால் கண்காணிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு லடாக்கில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவுக்கு எதிராக சீனா உளவு சதித்திட்டத்தை நடத்தியுள்ள தகவல் அம்பலமானது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட 10,000 க்கும் மேற்பட்ட முக்கியமான குடிமக்களை சீனா உளவு பார்க்கிறது. . நைகா, உபெர் இந்தியா, பேயு, பிளிப்கார்ட், ஜொமாடோ, ஸ்விக்கி போன்ற இந்திய நிறுவனங்களின் முக்கிய தலைவர்களும் கண்காணிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 10,000 க்கும் மேற்பட்ட முக்கிய குடிமக்களை கண்காணிக்கும் பணியை Shenzenவைச் சேர்ந்த Zhenhua Data Information Technology Co. Limited என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கண்டறிந்துள்ளது. 'hybrid warfare' மற்றும் 'great rejuvenation of the Chinese nation'ஆகியவற்றிற்கு தங்களுடைய பெருமளவிலான தரவுகளைப் பயன்படுத்துவதில் தங்கள் நிறுவனம் ஒரு முன்னோடி என்று Zhenhua Data Information Technology Co. Limited கூறுகிறது.
சீனாவின் இலக்கு, இந்தியாவில் துணிச்சலாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், நிறுவனர்கள் மற்றும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவன்ங்கள், ஈ-காமர்ஸ் தளங்களின் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோரும் அடங்குவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அறிக்கை கூறியுள்ளது. முக்கிய துறைகளின் நிறுவனர்கள், CEO, CFOக்கள், CTOக்கள் மற்றும் COOக்கள் மீதும் சீனாவின் டிராகன் கண் கூர்மையாக படிந்துள்ளது.
Zhenhua database தளத்தில் 1400 இந்திய நிறுவனங்கள் உள்ளன. OKIDB இல் கண்காணிக்கப்படும் முக்கியமானவர்களில் Nykaa, Uber India, PayU, Flipkart, Zomato, Swiggy ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிறுவனர்கள் உள்ளனர்.
பல்வேறு கொடுப்பனவுகள், கல்வி மற்றும் விநியோக செயலிகளையும் சீனா தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. நகர்ப்புற போக்குவரத்து பிரிவில் தொழில்நுட்ப startup நிறுவன்ங்கள் உட்பட பல நம்பிக்கைக்குரிய startupகள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களும் சீனாவின் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணம் செலுத்துவதற்கான செயலிகளான Paytm, Razorpay, PhonePe, Pine Labs, Aways Payments, மற்றும் IRCTCயுடன் கூட்டு சேர்ந்துள்ள FSS payment gateway ஆகியவை டிராகனின் ரேடரின் கீழ் உள்ளன.
கண்காணிப்பில் இருக்கும் டெலிவரி apps: Bigbasket, Daily Bazaar, Zappfresh, Fresh Meat Market, Zomato, Swiggy, FoodPanda
ஆன்லைனில் இறைச்சி விநியோக தளங்கள்; bike, B2B delivery platform ஆகியவையும் சீனாவின் கண்காணிப்பில் உள்ளன.
கான்பூரின் ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் அபய் கரண்டிகர்; பம்பே ஐ.ஐ.டி பேராசிரியர் தீபக் பி பாதக் என பல அறிஞர்களையும் சீனா விட்டு வைக்க்வில்லை.
ஜீ நியூஸ் சேனலின் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரியையும் சீனா உளவு பார்த்தது. சீனப் பொருட்களுக்கு எதிராக 'மேட் இன் இந்தியா' பிரசாரத்தை ஜீ நியூஸ் தொடங்கியது மற்றும் எல்.ஓ.சியில் சீனாவின் ஊடுருவலுக்கு எதிராக தொடர்ந்து மக்களுக்கு செய்திகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சீன உளவுத்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் Zhenhua நிறுவனம் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
கால்வான் பள்ளத்தாக்கு, கொங்ருங் நாலா உள்ளிட்ட பல பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக புதுடெல்லி மற்றும் பெய்ஜிங் இடையே ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவும் சூழ்நிலையில் சீனாவின் கண்காணிப்பு பலவிதமான சந்தேகங்களை எழுப்புகிறது.
ஜூன் மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது.
கடந்த மூன்று மாதங்களாக இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்தவொரு முடிவும் ஏற்படவில்லை என்பது கவலையளிக்கும் நிலையில் இந்தியாவில் சீனாவின் உளவு கண்காணிப்பு வலை பரவலாக இருப்பது கவலைகளை அதிகரிக்கிறது.
Also Read | சீனாவை வீழ்த்தி UN ECOSOC பெண்கள் ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR