இப்போது, ​​விளாடிவோஸ்டாக் (Vladivostok) நிறுவக நாள் கொண்டாட்டங்களை ரஷியா நடத்தியுள்ளது. இதனால்,  சீனா எரிச்சல் அடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளாடிவோஸ்டாக் நிறுவப்பட்ட 160 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக  ரஷ்ய (Russia) தூதரக அதிகாரிகள் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டதை அடுத்து ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில்   இராஜீய நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


ALSO READ | இந்தியா-சீனா எல்லை பிரச்சனை; லடாக் சென்ற பிரதமர் மோடி; உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்


ரஷ்ய நாட்டின் துறைமுக நகரம்  Vladivostok பசிபிக் பெருங்கடலில் உள்ள ராணுவ ரீதியாக , பிராந்திய ரீதியாக, பூகோள ரீதியாக அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். ரஷ்ய-சீன எல்லைக்கு அருகிலும், ரஷ்யா -வடகொரியா எல்லைக்கு அருகிலும் உள்ள துறைமுக நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.


1860 ஆம் ஆண்டிற்கு முன், சீனாவில் இந்த நகரம் ' Haishenwei ' என்கிற பெயருடன்  சீனாவின் பகுதியாக இருந்தது. ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான  போரில் சீனா தோற்ற பின்னர், 1860ல்  ரஷ்யாவில் இருந்த மன்னராட்சி, ஒரு ஒப்பந்தத்தின் மூலம், இந்த நகரத்தை  ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது.


சீன(China)  வரலாற்றின் இது ஒரு அவமானகரமான நிகழ்வாகவே இன்று வரை அந்நாட்டு மக்கள் நினைக்கின்றனர்.


சீனா  கடல்  பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் பேராசையில் உள்ள நிலையில்,  துறைமுக நகரமான Vladivostok மிக முக்கியமான பகுதியாக இருப்பதால், சீனா இதனை ஆக்கிரமிக்க  பல ஆண்டுகளாக முயன்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை


இந்நிலையில், சீன அதிகாரிகள் வீடியோவில், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் ஒரு காலத்தில் சீனாவின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறி, 1860 ஆம் ஆண்டில் சீனா போரில் தோல்வியடைந்த பின்னர் இணைக்கப்பட்டது என்ற விஷயத்தை வெளிப்படுத்தினர்.


சீனாவுடன் இந்த பகுதி தொடர்பாக பிரச்சனை நிலவி வரும் காரணத்தினால் தான், ஆசிய பகுதியில் சீனவின் ஆதிக்கத்தை தடுக்க ரஷியா தேவைப்படும் ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்கிறது என்பதையும் நான் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.


ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் பதவிக்காலத்தை 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு மக்களும் பெருமளவு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதும் ரஷிய சீன உறவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.


இது தவிர ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்திய பின்னர், அங்கு தற்போது, புதிதாக ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ளதால், சீனாவிற்கு சர்வ தேச நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவும் (US) சீன வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால், சீன மீது கோபமாக உள்ளது.


ALSO READ | டிக் டாக் மற்றும் பிற சீன செயலிகள் மீது அரசு தடை விதித்துள்ளதன் தாக்கம் என்ன..!!!


பல வாரங்களாக இந்திய வீரர்களுடன் எல்லை கட்டுபாட்டு பகுதியில் (LAC) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனா, எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளது.


சீன துருப்புக்களுடனான மோதலின் போது ஜூன் 15-16 தேதிகளில் கல்வான் பள்ளத்தாக்கில் இருபது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.ஆனால் சீனா அதன் விபத்து புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், இந்த மோதலின் போது சீன படையினர் பலர் உயிரிழந்ததாக சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் கூறியது.


உலக அரங்கில் சீனா தனிமைபடுத்துப்பட்டுள்ளது என்பதைத் தான் இந்த நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு உண்ர்த்துகின்றன.