அமெரிக்கா, தைவானைவிற்கு 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை விற்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.4 பில்லியன் டாலர் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போயிங் உட்பட அமெரிக்க (America) பாதுக்காப்பு நிறுவனங்கள் மீதான தடையை, சீனா அறிவித்து சில மணி நேரத்தில், அமெரிக்க ஹார்பூன் ஏவுகணை ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹார்பூன் ஒப்பந்தத்தில் போயிங் முக்கிய ஒப்பந்த நிறுவனம் ஆகும்.


மேலும், தைவான் (Taiwan), தொடர்ந்து சீனாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், "தைவானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதில் அமெரிக்காவுக்கு அக்கறை உள்ளது என்பதோடு, இந்தோ-பசிபிக் மண்டலத்தின் (Asia Pacific Zone) பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் தைவானின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என அமெரிக்கா கருதுகிறது" என்று கூறியுள்ளது.  


ஹார்பூன் ஏவுகணை கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 500 பவுண்டு எடையுள்ள ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது. 


ALSO READ | Islamophobia: ஒரே பதிலில் பாகிஸ்தானின் வாயை அடைத்த பிரான்ஸ் அதிபர்..!!!


 


இது கடலோர பாதுகாப்பு தளங்கள், மேற்பரப்பில் வான் ஏவுகணை தளங்கள், விமானம், துறைமுகங்களில் உள்ள கப்பல்கள், துறைமுகங்கள் மற்றும் தொழில்துறை மையங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.


சீன-தைவான் தகராறு நெடுங்காலமாக இருக்கும் பிரச்சனை ஆகும்.  சீனாவும் தைவானும் 1949 உள்நாட்டுப் போரில் பிளவுபட்டன. ராஜீய உறவும் இல்லை. ஜனநாயக தலைமை கொண்ட தைவான் தீவு தனது பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதி என்று சீனா தொடர்ந்து கூறுகிறது. சீனா தைவான் மீது தாக்குல் நடத்தப்படும் என தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 


ALSO READ | இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை என்பது என்ன... எப்போது தொடங்கப்பட்டது..!!!


 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR