இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை என்பது என்ன... எப்போது தொடங்கப்பட்டது..!!!

இந்த 2+2 பேச்சுவார்த்தையின் போது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமை மட்டுமல்லாது, சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகின்றன  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2020, 09:08 PM IST
  • இந்த 2+2 பேச்சுவார்த்தையின் போது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமை மட்டுமல்லாது, சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகின்றன.
  • இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட ராஜீய மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளை எளிதாக நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை என்பது என்ன... எப்போது தொடங்கப்பட்டது..!!! title=

உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா மற்றும்  இந்தியா இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான 2+2  பேச்சுவார்த்தை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 

இந்த வகையான பேச்சுவார்த்தை முறை ஜப்பானால் (Japan) தொடங்கப்பட்டது. பின்னர் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த பேச்சுவார்த்தை முறையை பின்பற்றின. இத்தகைய பேச்சுவார்த்தைகள் பொதுவாக பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட ராஜீய மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகளை எளிதாக நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின் போது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமை மட்டுமல்லாது, சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகின்றன.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தைகள் குறித்த அறிவிப்பு 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narndra Modi) , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் (Donald Trump) முதல்முறையாக சந்தித்தபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

ALSO READ | PNB வழக்கு: நீரவ் மோடியின் ஜாமீன்மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது

அதன் அடுத்த ஆண்டு அதாவது செப்டம்பர் 2018 இல், இரு நாடுகளுக்கும் இடையே முதல் இரண்டு பிளஸ் டூ பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் பிறகு 2019 டிசம்பரில் இதே போன்ற பேச்சு வார்த்தை நடைபெற்றது. இன்று முதல் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மூன்றாவது இரண்டு பிளஸ் டூ பேச்சுவார்த்தைகளாகும்.

இந்த 2+2 பேச்சுவார்த்தை என்பது இரு நாடுகளுக்கு இடையிலான அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை ஆகும். குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள். 

இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ( Mike Pompeo) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் (Mark Esper) ஆகியோர் இன்று மதியம் டெல்லி வந்தடைந்தனர். 

இவர்கள் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh) மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை (S.Jaishankar) சந்தித்து ஆலோசனை செய்வார்கள்.

இந்தியா சீனா இடையில் நிலவும் எல்லைப் பிரச்சனை, மற்றும் அமெரிக்கா சீனா இடையேயான உள்ள வர்த்தக போர் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்திய அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ALSO READ | பாகிஸ்தானில் வலுக்கும் தனி பலுசிஸ்தான் போராட்டம்.. சீனாவிற்கு தலைவலியை கொடுப்பது ஏன்.!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News