காபூல் : ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது, "சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது.  பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதுமட்டுமல்லாது சீனாவின் மூலமாக உலகமெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு' முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்".என்று ஜபிபஹுல்லா முஜாஹித் கூறினார்.  



எதிர்காலத்தில் முக்கிய தாதுவாக விளங்க போகும் டைட்டானியம் ஆப்கனில் அதிக அளவில் உள்ளது. மேலும், தாமிரம் உள்ளிட்ட ஏராளமான கனிம வளங்கள் ஆப்கனில் நிறைந்துள்ளது. இவற்றை கைப்பற்றும் முயற்சியில் சீனா காய்நகர்த்துவது குறிப்பிடத்தக்கது.


ALSO READ தாலிபான்களை நெருங்கும் பாகிஸ்தான்; காபூல் சென்றுள்ள ISI தலைவர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR