தாலிபான்களை நெருங்கும் பாகிஸ்தான்; காபூல் சென்றுள்ள ISI தலைவர்

இன்று தாலிபான்கள், தங்கள் புதிய அரசாங்கத்திற்கான முக்கிய பதவிகளை அறிவிக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் ISI தலைவர் காபூலை சென்றடைந்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 4, 2021, 05:19 PM IST
தாலிபான்களை நெருங்கும் பாகிஸ்தான்; காபூல் சென்றுள்ள ISI தலைவர் title=

 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, தினம், தினம் பரபரப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில், அங்கு புதிய அரசு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வெளியாக;லாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான  ISI  தலைவர் ஃபைஸ் ஹமீத் சனிக்கிழமை (செப்டம்பர் 4, 2021) காபூல் சென்றடைந்துள்ளார். அவர் ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரை சந்திக்கிறார். மேலும், உயர்மட்ட தாலிபான் (Taliban) தலைமையை சந்திப்பதாக கூறப்படுகிறது. இன்று தாலிபான்கள், தங்கள் புதிய அரசாங்கத்திற்கான முக்கிய பதவிகளை அறிவிக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் ISI தலைவர் காபூலை சென்றடைந்துள்ளார். 

தாலிபானின் புதிய அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் ஒதுக்கீடு தொடர்பாக ஹக்கானி குழுவுக்கும் முல்லா பராதார் பிரிவினருக்கும் இடையே கடும் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. இது. ஐஎஸ்ஐ தலைவரின் காபூல் வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை, தாலிபானின் இணை நிறுவனர் முல்லா பராதர் ஒரு புதிய ஆப்கான் அரசாங்கத்தை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.

ALSO READ | ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!

முல்லா அப்துல் கானி பராதர் (Mulla Abdul Ghani Baradhar) ஒருகாலத்தில் தாலிபானின் தனித்தலைவர் முல்லா முகமது உமரின் நெருங்கிய நண்பராக இருந்தார். தாலிபான்கள் கடைசியாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது அவர் துணை பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். பராதர் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு விடுதலையான பிறகு, அவர் தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்திற்கு தலைமை தாங்கினார், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் மிக முக்கியமான நபராக இருந்தார்

ALSO READ:ஆப்கான் விமான தளத்தை தன் வசப்படுத்த சீனா முயற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த நிக்கி ஹேலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News