செவ்வாய் கிரகதிற்கான ஆளில்லா விண்கலம்.. சீனா சந்திக்கும் சவால்கள் என்ன ..!!!
விண்வெளியில் ஆதிக்க செலுத்தி வரும் அமெரிக்காவிற்கும், விண்வெளியில் ஒரு புதிய வல்லரசாக மாற விரும்பும் சீனாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
விண்வெளியில் ஆதிக்க செலுத்தும் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அமெரிக்காவும், விண்வெளியில் ஒரு புதிய வல்லரசாக மாற விரும்பும் சீனாவும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல விரும்புகின்றன.
பெய்ஜிங் (Beijing ): அமெரிக்காவுடனான விண்வெளிப்போரில் வெற்றி பெறும் முயற்சியாக Tianwen-1 விண்கலத்தை செலுத்தியது. இந்த முயற்சி, செவ்வாய் கிரகத்தின் மர்மங்களை வெளிக்கொணர்வதற்கான சீனாவின் முதல் முயற்சி அல்ல. முன்னதாக 2011 ஆம் ஆண்டில், சீனா ரஷ்யாவுடன் செவ்வாய் கிரக பயணத்தைத் தொடங்கியது. ஆனால் அது தோல்வியுற்றது. ரஷ்ய விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறத் தவறி பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.
இப்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு, செவ்வாய் கிரகத்தின் மர்மத்தை கண்டறிந்து, இந்த போட்டியில் வெல்லும் இலக்கை நோக்கி அது செயல்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை, சீனா செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. இதன் மூலம், விண்வெளிப் போரில் அமெரிக்காவை விட தான் எந்த விதத்திலும் குறைந்த நாடு அல்ல என்பதை உலகுக்குத் தெரிவித்தது.
ALSO READ | சீனாவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களின் நிலை என்ன.....!!!
ஜூலை 30 அன்று அமெரிக்கா தனது விண்கலத்தை ஏவ திட்டமிட்டிருந்த நிலையில் , சீனா பந்தயத்தில் முன்னிலை வகிக்க சில நாட்களுக்கு முன்பு தனது விண்கலத்தை செலுத்த திட்டமிட்டது. டிராகன் மிஷன் டியான்வென் -1 என்று பெயரிட்டது, இது புகழ்பெற்ற கவிதை 'Questions to Heaven' என்ற பொருள் கொண்ட பெயர் தான் இந்த ரோவருக்கு வைக்கப்பட்டுள்ளது.
வானிலை சாதகமாக இருந்த நிலையில், சீனா தனது மிகப்பெரிய விண்வெளி ராக்கெட்டை தெற்கு தீவான ஹைனானில் (Hainan) இருந்து இதனை ஏவியது என்று நம்பப்படுகிறது. ஏழு மாதங்களில் சுமார் 55 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்தபின்னர், 2021 பிப்ரவரியில் தியான்வென் -1 என்ற விண்கலம் இலக்கை எட்டும்.
விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் போது சவால்கள் இருக்கும் என்று இந்த மிஷனின் செய்தித் தொடர்பாளர் லியு டோங்ஜி தெரிவித்தார். விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு அருகே வரும் போது, அதன் வேகத்தை குறைப்பது, அதாவது decelerate செய்வது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார் . அதன் வேகத்தை குறைப்பதற்கான நடமுறைகள் சரியாக செய்யப்படாவிட்டால், அதனை துல்லியமாக கணக்கிட்டு செய்யாவிட்டால், இந்த ஆய்வை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
ALSO READ | ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு: பதிலடி கொடுக்க சீனா சபதம்
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திங்களன்று செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தை அடைந்த பிறகு ஆய்வைத் தொடங்கும். முன்னதாக 1990 களின் பிற்பகுதியில், அமெரிக்கவின் 4 ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டது. பண்டைய நுண்ணிய உயிரினங்களை அடையாளம் கண்டு, அதன் அறிகுறிகளை ஆராய்வதோடு, 2031 ஆம் ஆண்டு வாக்கில் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட SUV வடிவ வாகனத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் பணி இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .
ஹெலாங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கில், இந்த செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடைய பணிகளை கண்காணிப்பதற்கான நிலயத்தை சீனா அமைத்துள்ளது. முன்னதாக, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியா செவ்வாய் கிரகம் தொடர்பான பல முயற்சிகளை மேற்கொண்டன.