சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிக அளவில் பரவி உள்ளது. இதன் காரணமாக அந்நகரங்களில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், ஜீரோ கோவிட் கொள்கையைப் பின்பற்றி வரும் சீனா, அடிக்கடி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதோடு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் சென்றார்களா என்பது மொபைல் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் கொரோனா தொற்று பரவுவதற்கான நடவடிக்கையையும் சீன அரசு மேற்கொண்டு வருகிறது. 


மேலும் படிக்க | கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்


அதன்படி, கொரோனா பரிசோதனையை தினசரி வாழ்க்கையின் நிரந்தர அம்சமாக மாற்ற சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நிரந்தர கொரோனா பரிசோதனை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஷாங்காயில் ஏற்கனவே 5 ஆயிரம் சோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 


குடியிருப்புப் பகுதிகள், தொழில் பூங்காக்கள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் சோதனை மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்து முடிவைத் தெரிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கட்டாயமாக்கவும் சீன அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க | கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை...அதிர்ச்சியூட்டும் காணொலி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR