சீனாவில் அதிபருக்கு எதிராக உச்சத்தை எட்டும் ஆர்ப்பாட்டங்கள்! மக்களை அடக்கும் போலீஸ்

Corona Lockdown Protest: சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரும் போராட்டங்களை அடக்க குவிக்கப்படும் போலீசார்
பெய்ஜிங்: நாட்டில் கோவிட் எதிர்ப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க சீனா அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஷி ஜின்பிங்கை அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரும் போராட்டக்காரர்களை வீட்டிற்கு அனுப்ப நாடு முழுவதும், குறிப்பாக பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிட் கட்டுப்பாடுகள் நாட்டில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து பொருளாதாரத்தை சேதப்படுத்தியுள்ளன. இருப்பினும், கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்று சீன அரசு உறுதியாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களின்படி, திங்களன்று நள்ளிரவில், ஹாங்ஜூ (Hangzhou) நகரில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். முன்னதாக, ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போராட்டங்களின் போது, பேரணியில் ஈடுபட்டிருந்தவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை, வார இறுதியில் கோவிட் லாக்டவுன் தொடர்பான போராட்டங்கள் நடந்த இடங்களில் மக்களை போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் படிக்க | 9 மனைவிகள் பத்தலையாம்... 10வதும் வேணுமாம்! அடம்பிடிக்கும் பிரபலம்!
தங்களிடம் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகள் (VPN) உள்ளதா என்பதைச் சரிபார்க்க தங்கள் தொலைபேசிகளைக் காட்டுமாறும், போராட்டங்களைப் பற்றிய செய்தியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் தளமான டெலிகிராம் செயலியையும் காட்டும்படியும் போலீசார் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. நாட்டில் VPN சட்டவிரோதமானது. சீனாவின் இணையத்திலிருந்து டெலிகிராம் செயலி தடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்காது.
காவலில் வைக்கப்பட்டிருந்த நபரை சுற்றியிருந்த ஒரு குழுவினர் பின்வாங்க முயற்சிக்கும் போது, ஒருவரை போலீசார் கைது செய்யும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலகிறது.
கிழக்கு மாகணமான ஷீஜியாங் (Zhejiang) தலைநகர் Hangzhou-வில், நூற்றுக்கணக்கான போலீசார் திங்கள்கிழமை இரவு ஒரு பெரிய பொது சதுக்கத்தில் பெருமளவில் கூடியிருந்தனர். அங்கு மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக காவல்துறையின் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்கள் கூறுகின்றன.
செவ்வாய்க்கிழமை காலை, ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கில், டெலிகிராம் செயலியில் வைரலாகும் செய்திகளின்படி, மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளிலும், எங்கெல்லாம் மக்கள் கூடும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதோ, அங்கெல்லாம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கால்பந்து உலகக்கோப்பை தோல்வியால் வெடித்தது கலவரம்... பெல்ஜியமில் பரபரப்பு!
கடந்த வாரம், சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீயால் பத்து பேர் உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில், கட்டிடம் இருந்த பகுதியில் லாக்டவுன் அமலில் இருந்ததால், மக்கள் வெளியேறவும், மீட்பு நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டதால் மக்களின் கோபம் உச்சத்தை அடைந்துள்ளது.
மக்களின் எதிப்புக் கருத்துக்களை முடக்க சீனாவின் அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. மக்களை போலீசார் முரட்டுத்தனமாக கையாள்வதை, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் உறுதி செய்கின்றன.
அதிலும், சீனாவின் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஒரு வெள்ளை அல்லது வெற்றுத் தாள் ( white or blank paper) ஒரு சின்னமாக மாறியுள்ளது. எதுவும் எழுதாமல் வெறும் காகிதத்தைக் காட்டினால், கைது செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்பதால், இப்படி தந்திர வழிகளில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மக்கள் முயல்கின்றனர்.
திங்கட்கிழமை மாலை மற்றும் இரவு முழுவதும் போலீசார் அதிக அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டதால், மக்கள் அதிக அளவில் கூடவோ அல்லது போராட்டங்கள் நடத்தவோ வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் படிக்க | Covid New Wave: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! கோவிட் அலையால் சீனாவில் லாக்டவுன் அமல்
போராட்டக்காரர்களை அடையாளம் காண்பதற்காக போலீசார் பலரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் AFP செய்தி முகமையுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார். தானும், தனது ஐந்து நண்பர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை செய்ததாக தெரிவித்த அவர், "நேற்று இரவு நான் லியாங்மா ஆற்றுக்குச் சென்றேனா ... அவர் அங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள், நான் எவ்வளவு நேரம் அங்கு இருந்தேன், அதைப் பற்றி நான் எப்படிக் தெரிந்துக் கொண்டேன் என்று விரிவாக விசாரித்தனர்" என்று அவர் AFP செய்தியாளரிடம் தெரிவித்தார்.
"நேற்று இரவு நடந்த போராட்டம் ஒரு சட்டவிரோத கூட்டம் என்றும், எங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் வழக்கமான சேனல்கள் மூலம் அவற்றை சமர்ப்பிக்கலாம் என்றும் காவல்துறை வலியுறுத்தியது" என்று அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை, தென்மேற்குப் பெருநகரமான செங்டுவில் பெருமளவில் கூடிய மக்கள், "எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வேண்டாம், எங்களுக்கு பேரரசர்கள் வேண்டாம்" என்று கோஷமிட்டனர். ஞாயிற்றுக்கிழமையும் ஷாங்காயில், சீன அதிபருக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்தன, அதனையடுத்து நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Zero Covid: சீனாவில் மக்கள் போராட்டம்! 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ