சீனாவின் நீர்வள அமைச்சகம் MWR ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான அவசரகால நிலையை இரண்டாம் நிலைக்கு உயர்த்தி அறிவித்திருக்கிறது. அவசர நிலை இரண்டாம் கட்டத்திற்கு செல்வது மிகவும் அபாயமான நிலையை  குறிக்கிறது. பருவமழைக் காலத்தில் கனமழையால் ஏற்கனவே வெள்ளச் சேதங்களை சந்திருக்கும் சீனாவில் தற்போது வெள்ள எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ள நிலைமையை சமாளிக்க இரண்டாம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாக ஜின்ஹுவா (Xinhua News Agency) தெரிவித்துள்ளது. 


ஜூலை 4 முதல் , நாடு முழுவதும் 212 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றன, அவற்றில் 19 ஆறுகளின் நீர் மட்டமானது, இதற்கு முன்பு எப்போதும் பதிவாகாத ஒன்று என சீனாவின் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரியான தைஹு ஏரியின் (Taihu Lake) நீர் மட்டம் தொடர்ந்து 15 நாட்களாக, அபாய அளவை விட உயர்ந்திருப்பதாக நீர்வள அமைச்சகம் கூறியது. 


Read Also | ஹாகியா சோபியாவை மீண்டும் மசூதியாக மாற்றிய துருக்கி அதிபர்


சீனாவில் நான்கு அடுக்கு வெள்ளக் கட்டுப்பாட்டு அவசர நடவடிக்கை அமைப்பு (four-tier flood control emergency response system) உள்ளது, நிலை மிகவும் கடுமையானது. நாடு வெள்ளம் கட்டுப்பாட்டுக்கான அவசரகால நிலையை IV ஆம் கட்டத்தில் இருந்து மூன்றாம் நிலைக்கு செவ்வாயன்று உயர்த்தியது. 


கிழக்கு அன்ஹுய் மற்றும் ஜியாங்சி மாகாணங்கள் உட்பட சீனாவில் 27 மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 141 பேர் இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர். கிழக்கு சீனாவின் Jiangxiயில் உள்ள Poyang Lakeஇன் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 22.72 மீட்டர் என்ற அளவை எட்டியது, இது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவு நீர்மட்டமாகும். இந்த ஏரியில் தான் Xingzi Hydrometric Station அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


1998 ல் சீனாவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டபோது, இங்கு 22.52 மீட்டர் அளவில் நீர்மட்டம் பதிவானது. மக்கள் விடுதலை ராணுவத்தின் கிழக்கு தியேட்டர் கட்டளையைச் சேர்ந்த 1,500 வீரர்கள் போயாங் கவுண்டிக்கு (Poyang County) வந்து மழை மற்றும் வெள்ளத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.


சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 5.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, போயாங் ஏரியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 4,30,000 பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.