இந்தியாவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சினிமாவை வளர்த்தெடுக்கும் முயற்சியில் சீனா...
நவம்பர் 13 ஆம் தேதி, பாகிஸ்தானின் “பர்வாஸ் ஹை ஜூனூன்”( “Parwaaz Hai Junoon”) என்ற அதிரடி திரைப்படம் சீன மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் திரைக்கு வரும்.
புதுடெல்லி: இந்திய திரைப்படங்களை வெளியிடும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் சீனாவில் அதிகரித்து வருகிறது. சீனாவின் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட இந்திய படங்களை ரீமேக்குகளை உருவாக்குகிறார்கள். ஆனால் பாகிஸ்தானுடன் நல்ல அரசியல் உறவு இருந்தபோதிலும், அந்நாட்டுத் திரைப்படங்கள் சீன சந்தைகளில் எடுபடவில்லை.
ஆனால் இப்போது, சீனா 40 ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் திரைப்படம் ஒன்றை வெளியிடுகிறது. இதற்கு காரணம், பெய்ஜிங் இஸ்லாமிய குடியரசுடன் ராஜதந்திர ரீதியாக உறவுகளை பலப்படுத்துகிறது.
நவம்பர் 13 ஆம் தேதி, பாகிஸ்தானின் “Parwaaz Hai Junoon” என்ற திரைப்படம் சீன மல்டிபிளெக்ஸ் அரங்குகளில் திரைக்கு வரும்.
சீன மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த வெளியீட்டை "பாக்கிஸ்தானும் சீனாவும் மிக நீண்ட காலமாக வைத்திருந்த ஒரு சிறந்த நட்பின் சான்று" என்று கூறுகின்றன.
இந்த நடவடிக்கை நலிந்து போயிருக்கும் பாகிஸ்தான் திரையுலகிற்கு ஒரு உத்வேகம் அளிக்கும் காரணியாக இருக்கும். காஷ்மீர் மீதான பதற்றங்கள் காரணமாக கடந்த ஆண்டு பிரபலமான இந்திய படங்களை தடை செய்ததில் இருந்து பாகிஸ்தான் திரைத்துறையும் சுணங்கிப் போயிருக்கிறது.
பெய்ஜிங் சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. சீனாவின் ஒன் பெல்ட், ஒன் ரோடு (One Belt, One Road (OBOR) முன்முயற்சியின் மகுடமாக CPEC மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது பண்டைய சீனாவின் பட்டுச் சாலை திட்டத்தை புதுப்பித்து, சீன நிறுவனங்களை உலகெங்கிலும் உள்ள புதிய சந்தைகளுடன் இணைக்கும் திட்டம். இந்தப் பட்டுப் பாதை திட்டம், உலகளாவிய உள்கட்டமைப்பு திட்டமாகும்.
பெய்ஜிங் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கட்டமைப்புகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக உதவி வருகிறது. $50 பில்லியன் டாலர்களை செலவு செய்து பாகிஸ்தான் முழுவதும் உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும் சீனா, அதை சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் (CPEC) ஒரு பகுதியாக செயல்படுத்துகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR