பீஜிங்: தங்கள் குழந்தைகள் திறன் படைத்தவர்களாக வேண்டும் என விரும்பாத பெற்றோர் இருக்க முடியாது. ஆனால், அதற்காக சில வினோதமான செயல்களை செய்யும் சிலரும் இருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கள் குழந்தைகள் ஒரு 'சூப்பர் கிட்' ஆக வேண்டும், ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பும் சீன (China) பெற்றோர்கள் தங்கள் நாட்டில் 'chicken parenting' என்ற கருத்தை பரப்பி அதை மகிமைப்படுத்தியுள்ளனர்.


சிக்கன் பேரண்டிங் என்றால் என்ன?


சிக்கன் பேரண்டிங் ஒரு வினோதமான குழந்தை வளர்ப்பு முறையாகும். இதில் பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'கோழியின் இரத்தம்’ கொண்ட ஊசியை செலுத்துகிறார்கள். இது,  கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஒரே மருந்தாக இருக்கும் என அவர்கள் கருதுவதாக தி சிங்கப்பூர் போஸ்டின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


ALSO READ: Viral News: 40 ஆண்டுகளாக தூங்காத வினோத பெண், மருத்துவர்களே வியக்கும் அதிசயம் 


இந்த கோழி இரத்த ஸ்டீராய்டுகள் குழந்தைகளிடம் (Children) உயர் செயல்திறனையும் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகள், கல்வி விளையாட்டு என அனைத்திலும் மிக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள். இது அவர்களது செயல்திறனை பன்மடங்கு அதிகரிப்பதாக நம்பப்படுகின்றது.


SupChina.com இன் அறிக்கையின் படி, இந்த 'சிக்கன் பேபி' கருத்து நாட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோ போன்ற நகரங்களில், பல 'வெறித்தனமான நடுத்தர வர்க்க சீன பெற்றோர்கள்' இது பற்றி மிகவும் தீவிரமாக உள்ளனர்.


சிக்கன் பேரண்டிங் பாணி அமெரிக்காவில் (America) இருக்கும் "ஹெலிகாப்டர் பேரண்டிங்" போன்றது. இந்த பாணியில் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி மட்டும் போதாது, நல்ல மதிப்பெண்கள் மட்டும் போதாது என்ற பரபரப்பிலேயே இருப்பார்கள். அனைத்து குழந்தைகளுக்கும் இவை அனைத்தும் கிடைப்பதால் தங்கள் குழந்தைகளை எப்படி தனித்துவமாக காட்டுவது என்று எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இவர்கள்.


சீன இளைஞர்களிடையே மனச்சோர்வு கணிசமாக அதிகரித்துள்ளது என்று SupChina ஊடகத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்தின. 2019-20 தேசிய மனநல மேம்பாட்டு அறிக்கை, சீன இளைஞர்களில் 25 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7.4 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்ததாக, சிங்கப்பூர் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


இதற்கிடையில், சீனாவின் குழந்தைப் பருவ மயோபியா விகிதம் உலகின் மிக உயர்ந்ததாக இருப்பதாகவும் அறிக்கைகள் கண்டறிந்துள்ளன. 71 சதவீத நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் 81 சதவீத உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கண் பார்வை கோளாறு இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் கண்டறிந்துள்ளது.


இந்த சிக்கன் பேரண்டிங் பாணி, ‘இன்வல்ஷனின்’ ஒரு வகையாக நிபுணர்களால் பார்க்கப்படுகின்றது. இந்த சொல், சீனாவில் உள்ள தீவிர போட்டியை விவரிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முயல்வதற்கு பதிலாக, இந்த தீராத போட்டியிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுவதாகவும் சிங்கப்பூர் போஸ்ட் தெரிவித்துள்ளது.


ALSO READ: சீனாவைச் சேர்ந்த பெண் அங்குள்ள தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடியைப் பற்றி பாடமெடுத்து வருகிறார்.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR