புதுடெல்லி: இரவில் சரியாக தூக்கம் வராததால், தூங்காமல் சிரமப்படும் பலரை நாம் பார்த்திருப்போம். படுத்தால் தூக்கம் வரவில்லை என அல்லல்படும் பலரை நாம் தினசரி வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம்.
இது மட்டுமல்லாமல், பகல் இரவு என்று பாராமல் எப்போதும் உறக்கம் (Sleep) வந்து பாடாய் படுத்தும் பலரையும் நாம் நம் வாழ்க்கையில் தினமும் கண்டு வருகிறோம். ஆனால் சீனாவில் வாழும் ஒரு பெண் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு கணம் கூட தூங்கவில்லையாம்!! ஆம், இது கதையல்ல, நிஜம்!! தீயாய் பரவி வைரல் ஆகிக்கொண்டிருக்கும் இந்த செய்தியை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
This woman hasn't slept for the past 40 years. This is so shocking! #china #lizhangying pic.twitter.com/5bGQAbMBCi
— Viral Bombs (@ViralBombs) September 4, 2021
தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்
சீனாவின் (China) ஹெனான் மாகாணத்தில் வசிக்கும் லி ஜானிங் (Li Zhanying), வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுமார் 45-46 வயது இருக்கும். கடந்த 40 ஆண்டுகளாக ஒரு நிமிடம் கூட அவர் தூங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருக்கு 5 அல்லது 6 வயது இருக்கும்போதுதான் அவர் கடைசியாக தூங்கியதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு கணவரும் ஆச்சரியப்பட்டார்
அந்தப் பெண்ணின் கணவர், லியு சுவோகின் (Liu Suoquin), லீயின் கூற்றை உறுதி படுத்தியுள்ளார். தான் தனது மனைவி தூங்கி பார்த்ததே இல்லை என அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, இரவு நேரத்த்தில், நேரத்தை செலவழிக்க தனது மனைவி லீ வீட்டு வேலைகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
துவக்கத்தில், லியு அவர்களுக்கு தூக்க மாத்திரைகளை வாங்கி வந்தார். ஆனால் லீ-க்கு இந்த மாத்திரைகளால் எந்த பயனும் ஏற்படவில்லை.
ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்களுக்கே தூக்கம் வந்துவிடுகிறது. ஆனால், லீ-க்கு தூக்கம் வருவதில்லை. லீ இது குறித்து சிகிச்சை பெற பல மருத்துவர்களிடம் சென்றார். ஆனால் இப்போது வரை அவரது விசித்திரமான நோய்க்கான சிகிச்சை பற்றியோ அல்லது காரணம் பற்றியோ எந்த மருத்துவரும் தெளிவாக எதையும் சொல்லவில்லை.
ALSO READ: Indian Food: முதன்முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரியரின் வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR