Corona effect on Children: கொரோனா குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா?

கோவிட் -19 உங்கள் குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா? கொரோனா வைரஸ் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 7, 2021, 06:07 PM IST
  • கொரோனா வைரஸ் ஒரு சுவாச நோய்.
  • இது, நுரையீரலின் காற்றுப் பைகளின் சுவர்களுக்கு சேதம் விளைவிக்கும்
  • மூச்சு விடுவதில் சிரமத்தை அதிகரிக்கும்
Corona effect on Children: கொரோனா குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா?  title=

கோவிட் -19 உங்கள் குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா?என்ற கேள்வி பெரிதாய் எழுந்துள்ளது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.  கொரோனா வைரஸ் சுவாச நோயை ஏற்படுத்துகிறது. நுரையீரலின் காற்றுப் பைகளின் சுவர்களுக்கு சேதம் விளைவிக்கிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்று தெரிந்துக் கொள்வோம். 

சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, மூக்கு, வாய் மற்றும் கண்கள் வழியாக உடலில் நுழைகிறது. பின்னர் அது உணவுக்குழாய்க்குச் சென்று, அங்கிருந்து நுரையீரலுக்கு செல்கிறது. உடலின் செயல்பாட்டை பாதிக்கும் COVID-19 நோய்த்தொற்றை ஏற்படுத்தும் SARS CoV-2, எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்பது கவலைக்குரிய விஷயம்.

எனவே, குழந்தைகளுக்கு இந்த தொற்றுநோய் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் இந்தியாவில், வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இயக்கமும் மும்முரமாய் நாட்டில் இதுவரை 69,90,62,776 பேர் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 

Also Read | நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?

இருப்பினும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளுக்கு இதுவரை அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. 
தடுப்பூசியால் கொரோனா ஏற்படாது என்று சொல்ல முடியாவிட்டாலும், நோய் தீவிரமாவதில் இருந்து பாதுகாக்கும்.  

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது முதலே, அது உடலை எவ்வாறு பாதிக்கிறது, எந்தெந்த உறுப்புகளுக்கு சேதங்களை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது இரண்டாவது அலை முடிவுக்குக் வர மூன்றாவது அலையாக கொரோனா தாக்கம் அதிகரித்தால், குழந்தைகள் பெருமளவில் பாதிப்பார்கள் என்று வரும் செய்திகள் கவலைகளை அதிகரிக்கின்றன.

READ ALSO | மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது - சவுமியா சுவாமிநாதன்

இந்த கொடிய கொரோனா வைரஸ் குழந்தைகளையும் அவர்களின் உறுப்புகளையும் எவ்வாறு பாதிக்கும் என்பது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
 
கொரோனா வைரஸ் ஒரு சுவாச நோய் மற்றும் உங்கள் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளின் சுவர்கள் மற்றும் புறணிக்கு சேதம் விளைவிக்கும். இருப்பினும், இந்த தொற்று குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் நுரையீரல் செயல்பாட்டை பாதிக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நுரையீரல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

READ ALSO | 20L தடுப்பூசி இலக்கை அடைய தமிழகத்தில் 10000 தடுப்பூசி முகாம்கள்

நிபுணர்களின் கூற்றுப்படி, பொதுவாக ஒருவரின் நுரையீரல், ஒரு வினாடியில் வெளியேற்ற வேண்டிய காற்றின் அளவை விட சற்று குறைந்த அளவு காற்றை வெளியேற்றும் (FEV1) பிரச்சனைகள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும். FEV1 (forced expiratory air volume in one second) என்பது நுரையீரல் செயல்பாட்டின் அளவீடுகளில் ஒன்றாகும். 

"ஈசினோபில்ஸ், அழற்சியின் குறிகாட்டிகள், ஒவ்வாமை எதிர்வினைகள் (eosinophils, indicators of inflammation, allergy responses) அல்லது உள்ளிழுக்கும் கார்டிகோஸ்டீராய்டுகளின் (inhaled corticosteroids) பயன்பாடு ஆகியவற்றில் கோவிட் -19 இருந்த நோயாளிகளுக்கு நுரையீரல் செயல்பாட்டில் எந்த வித்தியாசமும் இல்லை" என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் நுரையீரல் செயல்பாடுகளை கொரோனா வைரஸ் தடுக்காது என்றாலும், அது உங்கள் நுரையீரலை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கலாம். இது உங்கள் சுவாச சக்தியில் சரிவை ஏற்படுத்தலாம்.  கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டால், மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு, நுரையீரலுக்கு அருகில் வலி, உடலின் வெப்பநிலையில் அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.  இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். 

Also Read | போலி கோவிட் தடுப்பூசிகளை அடையாளம் காணும் சுலபமான வழிமுறை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News