நடுக்கடலில் நின்று அடம் பிடிக்கும் சீனா: கடுப்பாகி கண்டிக்கும் ஜப்பான்
ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு சீனக் கப்பல்கள் ஜப்பானின் உரிமை கோரப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து ஒரு மீன்பிடி ஜப்பானிய படகை அணுக முயற்சித்தன என்று ஜப்பானிய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோக்கியோ: சர்ச்சைக்குரிய கிழக்கு சீனக் கடல் தீவுக்கூட்டத்திற்கு அருகில் இருக்கும் ஜப்பானிய கடல் பகுதிக்குள் இரண்டு சீன கடலோர காவல்படை கப்பல்கள் நுழைந்து செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கிருந்து வெளியேற மறுத்ததை அடுத்து ஜப்பான் (Japan) சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் இது குறித்த தகவல்களை வழங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு சீனக் கப்பல்கள் ஜப்பானின் உரிமை கோரப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து ஒரு மீன்பிடி ஜப்பானிய படகை அணுக முயற்சித்தன என்று ஜப்பானிய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மீன்பிடிப் படகில் மூன்று குழு உறுப்பினர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ALSO READ: LAC-ல் பதட்டத்தில் உளறும் சீனா, உறுதியான நிலைப்பாட்டுடன் இந்தியா…
சீன கப்பல்கள் (Chinese Ships) இன்னும் அங்கேயே இருக்கின்றன என்றும், ஜப்பானிய அதிகாரிகள் அவற்றை வெளியேறக் கூறும் அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் புறக்கணித்து வருகின்றன என்றும் ஜப்பான் தெரிவித்தது.
சீன கடலோர காவல்படை கப்பல்கள் ஜப்பானின் தெற்கு சென்காகு தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை அவ்வப்போது மீறுகின்றன. சீனாவும் (China) இந்த பகுதியில் உரிமை கோரி வருகிறது. ஜப்பானிய கடலில் சீன கடலோர காவல்படையின் இரண்டு கப்பல்கள் இருப்பது வருத்தமளிப்பதாக தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கடோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜப்பான் சீனாவின் இந்தச் செயலை கடுமையாக எதிர்க்கிறது என்றும் சீனக் கப்பல்கள் உடனடியாக ஜப்பானிய பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோருகிறது என்றும் அவர் கூறினார். ஜப்பான் தனது நீர், நிலம் மற்றும் வான் வெளிகளை மிகவும் வலுவாக பாதுகாக்கும் என்று அவர் தெரிவித்தார். ஜப்பானிய கடலோர காவல்படை (Japan Navy) அதிகாரிகள், மூன்று கப்பல் பணியாளர்களுடன் மீன்பிடி படகு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR