லண்டன்: பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) பொதுத் தேர்தலில் அதிக பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (Boris Johnson)  மீண்டும் பிரதமராகவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 1935 ஆம் ஆண்டு முதல் பார்த்தால், எதிர்க்கட்சியான ஜெரிமி கார்பின் (Jeremy Corbyn) தலைமையிலான தொழிற்கட்சிக்கு மிக மோசமான தேர்தல் முடிவு இதுவாகும். செய்தி நிறுவனமான எஃபெ படி, மொத்தமுள்ள 650 இடங்களுக்கான தேர்தல் முடிவில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 349 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 326 இடங்கள் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் வெற்றி மூலம் மகிழ்ச்சியடைந்த ஜான்சன், "கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு பிரெக்ஸிட்டை செயல்படுத்த ஒரு சக்திவாய்ந்த புதிய ஆணை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தனது கட்சியின் வெற்றி "பிரிட்டிஷ் மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு மதிப்பளிப்பதற்கும், இந்த நாட்டை மேம்படுத்துவதற்கும், இந்த நாட்டின் அனைத்து மக்களின் திறனையும் எடுத்துக்காட்டுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது" என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.


மறுபுறம், தேர்தல் முடிவுகளால் ஏமாற்றமடைந்த தொழிற்கட்சித் (Labour party) தலைவர் ஜெர்மி கோர்பின், "எதிர்கால பொதுத் தேர்தல்களில் கட்சியை வழிநடத்த மாட்டேன் என்று அறிவித்துள்ளார். கோர்பின் தனது ஆதரவாளர்களிடம் "இது கட்சிக்கு மிகவும் ஏமாற்றமளிக்கும் இரவு" என்று கூறினார்.


இந்த தேர்தலில் கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை தேர்தலில் போட்டியிட்டனர். ஆனாலும் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜெரிமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.