லண்டன்: இங்கிலாந்தின் (England) தலைநகரான லண்டனில் (London) மீண்டும் லாக்டௌன் விதிக்கப்பட்டதால் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இருப்பினும் மக்கள் ஒரே இடத்தில் கூடினால், பிரிட்டனில் இரண்டாவது சுற்று கொரோனா தொற்றுநோய் (Corona Pandemic) தொடங்கக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. இதிலிருந்து தப்புவது மிகவும் அவசியம் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், இங்கு ஏற்கனவே கொரோனா தொற்றின் இரண்டாவது சுற்று தொடங்கி விட்டது என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையில், லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) ஏராளமான எதிர்ப்பாளர்கள் கூடினர். இதனால் அரசாங்கம் பெரும் கவலையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போரிஸ் ஜான்சன் கவலை


பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) நாட்டில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது சுற்று தொடங்குவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார். 'ஸ்பெயின், பிரான்ஸ் என ஐரோப்பாவில் பல நாடுகளில் அதிகரித்து வரும் தொற்றுநோய் என்னை அச்சப்பட வைக்கிறது' என்று அவர் கூறினார். இருப்பினும், பிரிட்டனில் இரண்டாவது லாக்டௌன் (Lockdown) காரணமாக ஏற்படும் 'பொருளாதார அழிவு' குறித்தும் அச்சத்தை வெளிப்படுத்திய அவர், வேறு வழி எதுவும் இல்லாத பட்சத்தில் லாக்டௌன் பற்றி சிந்திக்கப்படும் என்றார்.


ALSO READ: உலக COVID தொற்று எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியது! US, India-வில் மிக அதிக பாதிப்பு!!


பிரிட்டனில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்


பிரிட்டனில் கொரோனா தொற்றுநோயால் இதுவரை 41,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இது ஒரு சிறிய நாட்டைப் பொறுத்தவரை கவலைக்குரிய சூழ்நிலையை உருவாக்குகிறது. இதற்கிடையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரிட்டனின் வட கிழக்கு, வட மேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அரசாங்கம் கடுமையான லாக்டௌனை விதித்துள்ளது. லாக்டௌன் மூலம் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் முயன்று வருகிறது. போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூறுகையில், “கடந்த சில வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது சுற்றின் தொடக்கமாக இருக்கலாம்.” என்று தெரிவித்தார்.


இங்கிலாந்தின் நிலைமை மோசமாகும் விளிம்பில் உள்ளதா?


இங்கிலாந்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் இரு மடங்கிற்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பொது சுகாதார மருத்துவ இயக்குனர் யுவோன் டாய்ல் (Yvonne Doyle) வரவிருக்கும் நேரம் மோசமாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார். 


ALSO READ: COVID-19 தொற்று பரவ முக்கிய காரணம் குடும்ப நபர்கள் தான்: பிரெஞ்சு சுகாதார அமைச்சர்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR