புதுடெல்லி: உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 17,308,434; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 673,431; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 10,146,630


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,83,792 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,20,582 ஆகவும், பலி எண்ணிக்கை 34,968 ஆகவும் உயர்ந்துவிட்டது.


தமிழகத்தில் நேற்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. 


வட இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு விதிப்பு, பக்கத்து வீடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது...


வியட்நாமில் கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நாளிலிருந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஒரே நாளில் உச்சம்


பாலியில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக கடற்கரை, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது...


வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...


Read Also | கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு முதல் பலியான German shepherd வகை நாய்


கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:


1. அமெரிக்கா - 44,94,601


2. பிரேசில் - 26,10,102


3. இந்தியா - 16,34,746


4. ரஷ்யா - 8,32,993


5. தென்னாப்பிரிக்கா - 4,82,169


6. மெக்சிகோ - 4,16,179


7. பெரு - 4,00,683


8. சிலி - 3,53,536


9. இங்கிலாந்து - 3,03,910


10. இரான் - 3,01,530


உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU என்னும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.