புது டெல்லி: பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி (Shah Mehmood Qureshi), தனக்கு கொரோனா வைரஸ் (Coronavirus Positive) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளார். மேலும் அவர் ‘வலுவான மற்றும் தன்னமிக்கை’ எனக்கு உள்ளது. தனது வீட்டிலிருந்து தொடர்ந்து கடமைகளை மேற்கொள்வார் எனவும் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (Pakistan Tehreek-e-Insaf) தலைவர் ட்வீட் செய்ததாவது, "இன்று பிற்பகல் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் இப்போது COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தேன். அல்லாஹ்வின் அருளால், நான் பலமாகவும் ஆற்றலுடன் இருப்பதாக உணர்கிறேன். வீட்டிலிருந்து எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன்" "தயவுசெய்து என்னை உங்கள் ஜெபங்களில் வைத்திருங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.


 



 


இதையும் படியுங்கள் : இந்தியாவிற்கு எதிராக கூட்டுச்சதி! PoK-வில் பயங்கரவாதிகளை சந்தித்த PLA அதிகாரிகள்!!


கொரோனா (COVID-19) நோய்த்தொற்று உறுதி செய்வதற்கு முன்புதான், குரேஷி பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுடன் (Prime Minister Imran Khan) சேர்ந்து கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். சமீபத்திய நாட்களில், இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான சல்மே கலீல்சாத் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.


இதையும் படியுங்கள் : பயத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


குரேஷிக்கு முன்பு, கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த மற்ற உயர்மட்ட பாக்கிஸ்தானிய அரசியல்வாதிகளாக ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் (Sheikh Rasheed) மற்றும் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் சபாநாயகர் அசாத் கைசர் ஆகியோர் அடங்குவர்.


பாகிஸ்தானில் இதுவரை மொத்தம் 2,23,779 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன. இதில் 1,13,623 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 4,592 பேர் இறந்துள்ளனர். சிந்து மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 90,000 மற்றும் 78,000 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களாகும்.