உலகில் 60 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற COVID-19 தொற்றுநோய் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், கோவிட் நெருக்கடி தீர்ந்து விட்டது என்று நினைப்பது ஒரு "பெரிய தவறகி விடும்" என்று ஐ.நா தலைமைச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் புதன்கிழமை எச்சரித்தார். கோவிட்-19 தடுப்பூசி பெற கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என்ற உண்மை நிலை கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொற்றுநோய் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குட்டெரெஸ் வெலியிட்ட தனது செய்தி குறிப்பில், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வைரஸ் பரவல் தொடங்கியது உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றியது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் வைரஸ் வேகமாக பரவியது.


பொருளாதாரம், போக்குவரத்து நெட்வொர்க்குகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை முடக்கியது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன, மக்கள் தங்கள் அன்புக்குரியவரை பிரிந்து. இழந்து வாடினர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் பலர் வறுமையின் கொடூரத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். பல பகுதிகள் இந்த தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வர இன்னும் முயன்று வருகின்றன.


மேலும் படிக்க | கொரோனாவுக்கு எதிரான ‘யூனிவர்சல் சூப்பர் தடுப்பூசி’ சாத்தியமா


ஆனால், தொற்றுநோய் முடிந்துவிட்டதாக எண்ணுவது பெரிய தவறு என்று அவர் கூறினார். கொரோனாவால், பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர், மேலும் எண்ணற்ற மக்களின், மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. COVID-19 தடுப்பூசிகள் கிடைக்காத நாடுகள் உள்ளது என்பது குறித்து ஐ.நா தலைமை செயலர் கவலை தெரிவித்தார்.


"உற்பத்தியாளர்கள் மாதத்திற்கு 1.5 பில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறார்கள், ஆனால் மூன்று பில்லியன் மக்கள் இன்னும் முதல் டோஸ் கூட கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்," என்றார்.


மேலும் படிக்க | சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே


 கொரோனா காரணமால்ல உலக இயக்கம் ஸ்தம்பித்தது. மேலும் கொரோனா தொடர்ந்து உருவாறி வந்த நிலையில், டெல்டா, ஒமிக்ரான் வகை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என ஐநா தலைமை செயலர் கூறினார்.


மேலும் படிக்க | மறதி, குழப்பம் அதிகமா? Vitamin B குறைபாடு இருக்கலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR