ஜனாதிபதி மாளிகையில், கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடத்தில் இருந்து கோராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் அந்தப் பகுதியில் பாதிகாப்பு பணியில் இருந்த போலீஸ் உயர் அதிகாரியிடம் போரட்டகாரர்கள்  கொடுத்ததாக சொல்லப்படுகிறது.  நேற்று, லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்தனர். சதம் தெரு, தாமரை சாலை பகுதிகளில் போராட்டக்காரர்களை தடுக்க போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும், ராணுவத்தினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் மக்களை விரட்ட முயன்றனர். ஆனால், மக்கள் புரட்சி வெடித்த நிலையில், யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இலங்கை போராட்டம்; அதிபர் மாளிகையில் தடபுடல் விருந்து வைத்த போராட்டக்காரர்கள்


தொடர்ந்து முன்னேறிய போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகைக்குள் நுழைந்து, சூறையாடி அங்கு தேசியக்கொடி ஏற்றினர். அதிபரின் தலைமை செயலகத்தையும்  போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.  கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் அலமாரியில் சுமார் 17 மில்லியன் ரூபா பணம் காணப்பட்டதாகக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மாளிகைக்குள் நேற்று (09) பிரவேசித்த செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இந்தப் பணத்தைக் கண்டெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 


 



கிடைத்த பணத்தை செயற்பாட்டாளர்கள் எண்ணி ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள்  பலரும், அங்கு  கிடைத்த பணத்தை முறையாக கணக்கிட்டு உரிய பொறுப்பு வாய்ந்த துறைகளிடம் ஒப்படைத்திருப்பது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.  இது தொடர்பாக, ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள்  இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அப்படியிருந்தும், பணத்தின் அளவு மற்றும் எந்த நோக்கத்திற்காக பணம் அங்கு வைக்கப்பட்டது என்பது குறித்த சரியான தகவல்களை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR