அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில், நேற்று வானில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியின்போது, இரண்டு விமானங்கள் வானில மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வானில் ஒரு விமானம் மற்றொரு விமானத்தின் மீது மோதியதில், இரண்டு விமானங்களும் அப்படியே கீழே விழுந்து வெடித்து சிதறின. இந்த விபத்தால், ஆறு பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. போயீங் பீ-17 குண்டு தாங்கி விமானமும், மற்றொரு சிறிய விமானும் வானில் மோதியுள்ளன. இந்த இரு விமானங்களின் விமானிகள் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



வானில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தால், பலரும் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அதில், இந்த விபத்து சம்பவமும் பதிவாகியுள்ளது. அந்த வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில், பெரிய ரக பீ-17 வகை குண்டு தாங்கி விமானம் நிலத்தில் இருந்து சற்று மேல சென்றுக்கொண்டிருக்க, அப்போது அதற்கு இடதுபுறத்தில் இருந்து நேராக வந்த சிறிய ரக விமானம் ஒன்று (Bell P-63 Kingcobra),பெரிய விமானத்தின் மீது மேற்பகுதியில் மோதியது. இதில், இரண்டும் விமானங்களும் கடும் சேதத்திற்குள்ளாகின. 


மேலும் படிக்க  | சார்லஸ் மன்னரின் மீது வீசப்பட்ட முட்டை; வீசியவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா!



பீ-17 குண்டு தாங்கி விமானம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் விபத்துக்குள்ளான உடனேயே அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மக்கள் அலறி அடித்து ஓடினர். விமானப்படையின் நிகழ்ச்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து, டல்லாஸ் நகரின் மேயர் எரிக் ஜான்சன் கூறுகையில்,"நமது நகரில், விமான சாகச நிகழ்ச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதுகுறித்த  தகவல் இன்னும் வரவில்லை, அல்லது இந்த நேரத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை" என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, போலீஸ் மற்றும் தீயணைப்பு, மீட்பு குழுவினர் தொடர்ந்து சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 



பீ-17 குண்டு தாங்கி, விமானம் ஜெர்மனிக்கு எதிரான இரண்டாம் உலகப்போரின்போது, மிகவும் உதவிகரமாக இருந்த விமானம் என தெரிவிக்கப்படுகிறது. குண்டுதாங்கி விமானத்திலேயே மிகவும் சிறந்த வகையிலான விமான இது. மற்றொரு சிறிய ரக விமானமும் அதே போர் காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோன்று, 2019ஆம் ஆண்டு அக். 2ஆம் தேதியும், கனெக்டிகட் விமான நிலையத்தில் பீ-17 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க  | மீண்டும் கரோனா... கட்டுப்பாட்டை மீறி சீனாவில் அதிகரிப்பு - முழு ஊரடங்கு அமல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ