கிங் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான பேட்ரிக் தெல்வெல், யார்க் நகரில் அரசர் கிங் சார்லஸ் மற்றும் ராணி, கமிலா மீது முட்டைகளை வீசியதற்காக போலிசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு சிறப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பேட்ரிக் கைது செய்யப்பட்டார்.
கிங் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டைகளை வீசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு பொது இடங்களில் முட்டைகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து இணையதளமான 'தி மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், எதிர்காலத்தில் மன்னர் சார்லஸ் இடம் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். வடக்கு இங்கிலாந்தின் யோர்க் நகரில் உள்ள மிக்லேகேட் பார் மைல்கல்லில் மக்களைச் சந்தித்தபோது மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | திகில் அனுபவத்தை கொடுக்கும் இங்கிலாந்து சிறை! கேள்விபட்டிருக்கிறீர்களா?
அதேநேரம், நீதிமன்றில் விளக்கமளித்த குற்றஞ்சாட்டப்பட்டவர், ஒரு கும்பல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். தான் செய்த இந்த தவறுக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறினார். போலீசார் பேட்ரிக்கை விசாரித்து ஜாமீன் கொடுத்து விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட பிறகு, யார்க் பல்கலைக்கழக மாணவர் பேட்ரிக், 'கும்பல் என்னைத் தாக்கியது. மக்கள் என்னை வில்லனாக்கினார்கள். அன்று யாரோ ஒருவர் என் தலைமுடியை கெட்டியாக பிடித்திருந்தார். யாரோ என்னை அறைய விரும்பினர். ஒரு மனிதன் என் மீது துப்பினான். எனக்கு ஒரே குழப்பாக இருந்தது. என் வக்கீல் நல்லவர் என்னைக் காப்பாற்றினார். சமூக வலைதளங்களிலும் என்னை மிரட்டி வருகின்றனர் என்றார்.
மேலும் படிக்க | 'ஆட்குறைப்புக்கு நான்தான் முழு பொறுப்பு' - மார்க் ஜுக்கர்பெர்க் பேசிய வீடியோ லீக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ