வாஷிங்டன்:  இன்னும் சில வருடங்களில் உலகம் பெரும் அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும். அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில்  (Thwaites Glacier) ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இதன் காரணமாக உலகளாவிய கடல் மட்டம் திடீரென குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பல பகுதிகள் நீரில் மூழ்கி மக்கள் இடம்பெயர நேரிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடல்களின் வெப்பமயமாதலின் விளைவாக த்வைட்ஸ் ஈஸ்டர்ன் ஐஸ் ஷெல்ஃப் (TIES)பனிப்பாறைகளை  இணைப்பதற்கான புள்ளியாக செயல்படுகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் படங்கள் TIES பகுதியில் பெரிய விரிசல்களை  ஏற்பட்டுள்ளது. இந்த மிதக்கும் பனிக்கட்டி உடைந்தால் கடல் மட்டம் 25% உயரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


பனிப்பாறை நிபுணர் பேராசிரியர் டெட் ஸ்கம்போஸ், பனிப்பாறையின் நிலையில் வியத்தகு மாற்றங்கள் நிகழப் போகின்றன என்றும் த்வைட்ஸ் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருகிறது, இப்போது அதன் பெரும்பகுதி உடைந்து போகும் அபாயத்தில் உள்ளது எனவும் கூறினார். பனிப்பாறையில் விரிசல் அதிகரித்து உடைந்தால், அது த்வைட்ஸ் பனிப்பாறையின் கிழக்கு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இன்னும் வேகமாக உருகச் செய்யும். இந்த நிகழ்வின் காரணமாக, பனிப்பாறை உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.


ALSO READ | Black Hole: பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு என NASA தகவல்!


பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், த்வைட்ஸ் பனிப்பாறை வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், இது முழு உலகிற்கும் ஒரு பெரிய ஆபத்தின் அறிகுறியாகும். அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த பனிப்பாறை பகுதி, 1980 முதல், குறைந்தது 600 பில்லியன் டன் பனியை இழந்துள்ளது. த்வைட்ஸின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட பிரிட்டனை பரப்பளவிற்கு சமமானது.  எனவே இது உருகினால் உலகளவில் கடல் மட்டம் பெரிதும் உயரும்.


ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!


முன்னதாக, அமெரிக்காவின் (America) மன்ஹாட்டன் நகரின் மூன்றில் இரண்டு பங்கு   என்ற அளவில் 1100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான பனிப்பாறையில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஓட்டையைப் பார்த்து, ​​உருகிய பனிக்கட்டி சுமார் 14 டிரில்லியன் டன்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்களும் மிக மோசமான ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளன. பனிப்பாறையின் ஒரு பகுதி உடைவதால், உலக கடல்களின் நீர்மட்டம் 5% அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனால் கடலோர பகுதிகள் தண்ணீரில் மூழ்கும்.


ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR