நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை: அமெரிக்க கொலைக் குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு வியாழன் மாலை நைட்ரஜன் வாயு மூலம் அலபாமாவில் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். இதன் பிறகு, நைட்ரஜன் வாயு முகமூடி அணிவித்து ஒருவருக்கு மரண தண்டனை வழங்கிய உலகின் முதல் மற்றும் ஒரே நாடு அமெரிக்கா என்று ஆனது. இதில் உள்ள சிறப்பு விஷயம் என்னவென்றால், 58 வயதான கென்னத் யூஜின் ஸ்மித்திற்கு இதற்கு முன்பும் மரண தண்டனை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் உயிர் பிழைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

35 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தண்டனை


சுமார், 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமெரிக்க பெண் கொலை செய்யப்பட்டார். ஒருவரின் உத்தரவின் பேரில் திட்டமிட்டு ஸ்மித்  கொலை செய்த சம்பவம் நடந்து இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஸ்மித் தனது செயல்களுக்காக தண்டிக்கப்பட்டார், அதுவும் முற்றிலும் மாறுபட்ட முறையில். முன்னதாக 2022 ஆம் ஆண்டு, விஷ ஊசி போட்டு அவரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால்  மருத்துவர்களால் அவரது நரம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவருக்கு ஊசி போட பல முறை முயற்சித்த போதிலும், அது முடியாமல் போனதால், அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.


உலகம் முழுவதும் ஸ்மித்தின் தண்டனை குறித்த விவாதம்


இதற்குப் பிறகு, அலபாமா நீதிமன்றம் நைட்ரஜன் வாயுவின் உதவியுடன் ஸ்மித்திற்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்தது, அதுவே நடந்தது. ஜனவரி 25 மாலை, நைட்ரஜன் வாயு மூலம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட இந்த மரணம் குறித்து அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஏனென்றால், ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட இந்த மரணத்திற்கு எதிராக எண்ணற்ற அமெரிக்க குடிமக்களுடன் கோடிக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்களும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.


மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது


கென்னத் ஸ்மித் சார்பில், அவருக்கு வழங்கப்பட்ட  மரண தண்டனையை எதிர்த்து அலபாமா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மேலும் இது காட்டுமிராண்டித்தனம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி மன்னிப்பு கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு எது நடந்தாலும் அது சட்டப்படி நடக்கும் என்று கூறி அவரது மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.


மேலும் படிக்க | கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி


மரண தண்டனை  நிறைவேற்றப்பட்ட விதம்


நைட்ரஜன் வாயுவைக் கொண்டு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக ஸ்மித் முதலில் மரண அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டார், பின்னர் அவரது முகத்தில் காற்று புகாத முகமூடி போடப்பட்டது. இந்த முகமூடி தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கப் பயன்படுத்தப்படும் முகமூடியைப் போலவே இருந்தது. மற்றும் அனைத்து செயல்முறைகளும் முடிந்ததும். பின்னர் முகமூடியின் உதவியுடன் அவருக்கு நைட்ரஜன் வாயு வழங்கப்பட்டது. இந்த வாயு நேரடியாக அவரது உடலுக்குள் சென்றது. முகமூடி அணிந்ததால், அவருக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவர் இறந்தார்.


சில நிமிடங்களில் மரணம்


நைட்ரஜன் வாயு அவருக்கு குறைந்தது 15 நிமிடங்கள் செலுத்தப்பட்டது. அவருக்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு நைட்ரஜன் வாயு கொடுக்கப்பட்டது. டாக்டர்களின் கூற்றுப்படி, நைட்ரஜன் வாயுவை சுவாசித்த சில நொடிகளில் அவர் மயக்கமடைந்து அடுத்த சில நிமிடங்களில் இறந்தார்.


மேலும் படிக்க | தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ