தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

False Malicious Propaganda Of Pakistan: பாகிஸ்தானில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2024, 07:38 AM IST
  • பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா!
  • பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு பெயர் போனது பாகிஸ்தான்
  • தீவிரவாத குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி
தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா! title=

நியூடெல்லி: பாகிஸ்தான் மண்ணில் இரண்டு பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தானின் தவறான, தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை இந்தியா கண்டித்துள்ளது. கடந்த ஆண்டு சியால்கோட் மற்றும் ராவல்கோட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா வியாழக்கிழமை மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு சியால்கோட் மற்றும் ராவல்கோட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று தெளிவுபடுத்திய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தானின் சமீபத்திய தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற பொய்யான தகவலை பரப்புவது அடிப்படையற்றது மற்றும் அபத்தமானது” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!

 

"இந்திய முகவர்கள்" மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் படுகொலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளுக்கு தங்களிடம் "உறுதியான ஆதாரங்கள்" இருப்பதாக பாகிஸ்தான் கூறியதை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுச் செயலர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி, பாகிஸ்தானுக்குள் இந்தியா "பிராந்திய மற்றும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளை" நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் படிக்க | கங்கையில் நீராடினால் சரியாகிடும்.. மூடநம்பிக்கையால் 5 வயது அப்பாவி சிறுவன் பலி

இதற்கு பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால், பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் நாடு தாண்டிய சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மையமாக பாகிஸ்தான் செயல்படுவது நன்கு அறியப்பட்ட ஒன்று என தெரிவித்தார்.  

"பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் சொந்த கலாச்சாரத்தால் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியாவும் பல நாடுகளும் பாகிஸ்தானை பலமுறை எச்சரித்துள்ளன," என்று கூறிய ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் அதன் செயல்களுக்கு பொறுப்பு. அது தன் தவறுகளுக்காக மற்றவர்களைக் குறை சொல்ல முடியாது. இது சரியான காரணமோ அல்லது தீர்வோ அல்ல” என்று தெரிவித்தார்.  

மேலும் படிக்க | Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News