இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசியாவின் முக்கியச் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லாம்பாக் தீவில் நேற்று காலை 6.07 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவான இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட சேதம் சற்று அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது. எனினும் அடுத்த 2 மணி நேரத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.


சுமார் 3,19,000 பேர் வசித்து வருகின்ற லாம்பாக் தீவு பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த நிலநடுக்க உணரப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு வாரத்திற்கு முன்னர் இதே லாம்பாக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் தற்போது மீண்டும் இந்த நிலநடுக்கம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்த நிலையில் இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி  காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.



உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 82-ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாகவும், சிக்கி இருப்பவர்களை மீட்பு பணிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!