ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் மானுசா நாணயக்கார தனது பதவியினை ராஜினாமா செய்வதாக அதிபர் சிறிசேனாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மானுசா நாணயக்கார. தன்னிச்சையான அரசியல் நியமங்களை ஏற்றுக்க மனம் இல்லாமல், ஜனநாயகத்தினை பாதுகாக்கப் தனது பதவியினை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 


இதனைத்தொடர்ந்து தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் வரும் 14- ஆம் நாள் அந்நாட்டு நாடாளுமன்றம் கூட உள்ளது.


இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற 113 வாக்குகள் தேவை. இந்நிலையில், தற்போது மானுசா நாணயக்கார தனது பதவியினை ராஜினாமா செய்துள்ள நிலையில் ராஜபக்சவேயின் பதிவி தக்கவைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.