அமெரிக்காவில் புயல் ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளது. இயற்கையின் அழிவுக்கு முன்னால், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடு கூட தாக்கு பிடிப்பது கடினம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இயற்கையின் இந்த தாக்குதலில் இதுவரை 32 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக இவர்கள்வ்அனுமதிக்கப்பட்டுள்ளனர். டென்னசி, ஆர்கன்சாஸ், இந்தியானா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய இடங்களில் இயற்கை சீற்றத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமையும் கடுமையான இடி, புயல் மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்


இந்த இயற்கை பேரிடரில் பெரிய அளவில் உயிர் சேதம் மற்றும் உடமை இழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து, சேதமடைந்துள்ளன. பெரிய வாகனங்கள் குப்புற கவிழ்ந்ததில் இருந்தே புயலின் சக்தியை யூகிக்கலாம். மின்கம்பிகள் விழுந்தன. வலுவான தூண்கள், பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.


அவசரநிலை பிரகடனம்


ஆர்கன்சாஸ் மாகாண ஆளுநர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் அவசர நிலையை அறிவித்துள்ளார். இங்கு தேசிய காவலல் படையினர் மக்களின் உதவியுடன் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்கட்டான காலங்களில் தனது மக்களுடன் இருப்பதாக ஆளுநர் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். மிக விரைவில்  உதவிகள் வந்தடையும் என அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார் என்று அவர் கூறினார். ஆர்கன்சாஸ், டென்னசி, இந்தியானா, இல்லினாய்ஸ் மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களில் அதிக சேதம் பதிவாகியுள்ளது. இந்த பேரழிவு சூறாவளி காரணமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தலைநகர் லிட்டில் ராக் உட்பட ஆர்கன்சாஸை பல சூறாவளி தாக்கியதில் வெள்ளிக்கிழமை குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று ஆர்கன்சாஸின் கவர்னர் கூறினார்.


மேலும் படிக்க | ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!


சூறாவளி எச்சரிக்கைகள்


அறிக்கையின்படி, வெவ்வேறு இடங்களில் 60 க்கும் மேற்பட்ட சூறாவளி எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டது. சூறாவளி என்பது அமெரிக்காவில் ஒரு பொதுவான நிகழ்வாகும், குறிப்பாக நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில், இத்தகைய அழிவு அடிக்கடி நிகழ்கிறது. அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை மிசிசிப்பி நகரமான ரோலிங் ஃபோர்க்கை பார்வையிட்டார். இது கடந்த வார சூறாவளியின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அத்துடன், இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


32 பேர் இறந்தனர்;  நூற்றுக்கணக்கானோர் காயம்


அவசரகால அதிகாரிகள், சூறாவளியின் அழிவு குறித்து கூறுகையில், அவர்களின் குழு இரவு முழுவதும் ரோந்து சென்றபோது பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்றும், அதே நேரத்தில், இல்லினாய்ஸ், இந்தியானா மற்றும் அலபாமாவில் சிலர் பலியான செய்தி கிடைத்துள்ளது எனவும் கூறினெ. சூறாவளியில் இது வரை 32 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | 5 பயணிகளை விட்டுவிட்டு பறந்த விஜயவாடா - குவைத் விமானம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ