ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2023, 10:49 AM IST
  • பாகிஸ்தானில் எலுமிச்சையின் விலை கிலோ ரூ.800 ஆக உயர்ந்துள்ளது.
  • பூண்டு கிலோ ரூ.640 ஆக உள்ளது
  • அதே வாழைப்பழம் தற்போது ஒரு டஜன் ரூ.250 முதல் 500 வரை விற்கப்படுகிறது.
ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!   title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியும், உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் ஏற்கனவே பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ரம்ஜான் மாதத்தில் சாதாரண பாகிஸ்தானியர்கள் வாழ்வதே இப்போது கடினமாகி வருகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான துனியா வெளியிட்ட செய்தியில், ரம்ஜான் காலத்தில் எலுமிச்சையின் விலை பாகிஸ்தான் ரூபாயில் கிலோ 800 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை விலை 250 கிராம் ரூ.200.

பூண்டு பற்றி பேசுகையில், ஒரு கிலோ 640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி மற்றும் பாகற்காயின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.120 ஆகவும், பாக்கு கிலோ ரூ.140 ஆகவும் உள்ளது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் இப்தாரின் போது பழங்களை சாப்பிடுவார்கள். ஆனால் பழங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரம்ஜானை முன்னிட்டு கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட தர்பூசணி, தற்போது 250 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆளை விடுங்கப்பா... நாட்டை விட்டு ஓடும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் பைலட்டுகள்..!!

பாகிஸ்தானில் பழங்களின் விலை அதிகரித்துள்ளது

ரம்ஜானுக்கு முன்பு பாகிஸ்தானில் வாழைப்பழத்தின் விலை ஒரு டஜன் ரூ.100 ஆக இருந்தது. ஆனால் சில பகுதிகளில் ரூ.250-500 வரை விற்கப்படுவதாக பல தகவல்கள் கூறுகின்றன. 250 கிராம் ரூ.50க்கு விற்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி தற்போது ரூ.150க்கு கிடைக்கிறது. பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் ஊடக அறிக்கையில், பலர் விலையுயர்ந்த பழங்களை வாங்க முடியாமல் அதனை தவிர்த்து வருகின்றனர் என கூறப்படுகிறது. அதிலும் முக்கிய உனவான கோதுமை மாவின் விளை மிகவும் அதிகரித்துள்ளது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தண்ணீர் நெருக்கடி

பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறையுடன், தண்ணீர் பிரச்னையும் நிலவி வருகிறது. பாகிஸ்தானில் முன்னதாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது. சிந்து நதி அமைப்பு ஆணையம் (ஐஆர்எஸ்ஏ) தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியது, அதன் காரணமாக மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் 'சர்ச்சைக்குரிய' மூன்றடுக்கு நீர் மேலாண்மை முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பாகிஸ்தான் செய்தித்தாள் டான் தெரிவித்துள்ளது. சிந்து நதியின்  ஆணையமான IRSA அமைப்பின் தொழில்நுட்பக் குழு மார்ச் 24 அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது.

மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதில் தயக்கம்.. அரபு நாடுகளிடம் கியாரண்டி கேட்கும் IMF!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News