வங்கி கொள்ளையில் ஆறு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை- டாக்கா கோர்ட்டு
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள வங்காளதேச வணிக வங்கிக்கு பத்துக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து வங்கியின் மேலாளர் உள்பட 7 பேரை சுட்டுக்கொன்று விட்டு வங்கியில் இருந்து 12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பினர். தப்பி செல்லும் போது ஒரு திருடனை பிடித்து மக்கள் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் வங்காளதேசத்தை அதிர வைத்தது.
தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் தீவிரவாத இயக்கம் தான் இந்த சம்பவத்தை செய்தார்கள் என தெரியவந்தது.
இவ்வழக்கு டாக்கா கோர்ட்டு விசாரித்து வந்தது. விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையான தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஒரு கொற்றாவளிக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.