Nepal: எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் இதுதான் தெரிஞ்சுக்கோங்க...
இமயமலையில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை நேபாளம் அறிவித்துள்ளது. நேபாளத்தில் எடுக்கப்பட்ட அண்மை அளவீடுகளுக்கு பிறகு இந்த செய்தியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.
புதுடெல்லி: இமயமலையில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை நேபாளம் அறிவித்துள்ளது. நேபாளத்தில் எடுக்கப்பட்ட அண்மை அளவீடுகளுக்கு பிறகு இந்த செய்தியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டார். எவரெஸ்ட் சிகரத்தின் புதிதாக அளவிடப்பட்ட உயரம் 8848.86 மீட்டர்கள் (metres) என நேபாள வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.
இமயமலைத் தொடரில் அமைந்திருக்கும் உலகிலேயே உயரமான மலைமுகடு இந்தியாவில் எவரெஸ்ட் சிகரம் (Mount Everest) என்று அழைக்கப்படுகிறது. நேபாளத்தில் சாகர்மா (sargarmatha) என்றும், சீனாவில் சோமோலுங்குமா (Chomolungma) என்றும் எவரெஸ்ட் சிகரம் அழைக்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து உலகிலேயே உயர்ந்த மலைச்சிகரம் எவரெஸ்ட். கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) உள்ள எவரெஸ்ட் கொடுமுடி இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் (Mahalangur) எவரெஸ்ட் மலை அமைந்துள்ளது. சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி) மற்றும் நேபாளம் இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது என்பதும் இந்த மலைச் சிகரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
Read Also | இந்தியாவின் இந்த பகுதியில் பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டிகள் எப்படி ஓடுகின்றன தெரியுமா
1856 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிரேட் டிரிகோனெமெட்டிகல் சர்வே ஆஃப் இந்தியா (Great Trigonometrical Survey) எவரெஸ்ட்டின் உயரத்தை முதலில் வெளியிட்டது. பின்னர் பீக் XV என அழைக்கப்பட்டு, இமயமலையின் உயரம் 8,840 மீட்டர் அதாவது 29,002 அடி என்று நிறுவப்பட்டது. சீனா மற்றும் நேபாளத்தால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய அதிகாரபூர்வ உயரம் 8,848 மீட்டர் (29,029 அடி) ஆகும். 1955 ஆம் ஆண்டு இந்திய ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, பின்னர் 1975 ஆம் ஆண்டு சீனா மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலும் இந்த உயரம் உறுதிப்படுத்தப்பட்டது.
சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் எவரெஸ்டின் (Mount Everest) உயரம் பற்றிய வாதம் 2005 முதல் 2010 வரை ஐந்து ஆண்டுகள் நீடித்தது. சீனா மலையின் உயரத்தை பாறையின் உயரம்வரை 8,844 மீட்டர் உயரம் என்று வாதிட்டது, ஆனால் இதை மறுதலித்த நேபாளம், எவரெஸ்ட் சிகரத்தின் பனி உயரம் 8,848 மீட்டர் என்பதே சரியான அளவு என்று விளக்கம் கொடுத்தது. 2010 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உயரம் 8,848 மீ என்று இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீ என சீனாவின் கூற்றை நேபாளம் அங்கீகரித்திருந்தது.
Read Also | உலக இயற்கை பாதுகாப்பு தினம்: இயற்கையை மதிப்போம், வளங்களைக் காப்போம்!!
இந்த நிலையில் தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் புதிதாக அளவிடப்பட்ட உயரம் 8848.86 மீட்டர்கள் (metres) என நேபாள வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்திய பிரிட்டிஷ் சர்வேயர் (British Surveyor General of India) ஜெனரல் ஆண்ட்ரூ வாவ் (Andrew Waugh) பரிந்துரையின் அடிப்படையில் எவரெஸ்ட் என்ற அதிகாரப்பூர்வ ஆங்கில பெயரை 1865 ஆம் ஆண்டில் ராயல் புவியியல் அமைப்பு (Royal Geographical Society) வழங்கியது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR