உலக இயற்கை பாதுகாப்பு தினம்: இயற்கையை மதிப்போம், வளங்களைக் காப்போம்!!

உயிர்களின் உயிர்ப்பிடம் இயற்கை. அதை உதாசீனப்படிடுத்தும் மூடர்களாய் நாம் இருந்து விட வேண்டாம்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 28, 2020, 04:48 PM IST
  • இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
  • இயற்கை வளங்கள் மிக விரைவான விகிதத்தில் குறைந்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மக்கள்தொகை அதிகரிப்பு.
  • தொழில்நுட்ப முன்னேற்றமும் ஆடம்பரமான வாழ்க்கை முறையும் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன.
உலக இயற்கை பாதுகாப்பு தினம்: இயற்கையை மதிப்போம், வளங்களைக் காப்போம்!! title=

உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் மட்டுமல்லாமல் தினமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலைத்தன்மையை (Sustainability) ஊக்குவிக்கவும் இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

நமது பூமியில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் இருப்பதால், இயற்கை வளங்களை (Natural Resources) பாதுகாப்பதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நம் அனைவரிடமும் இருக்க வேண்டும். இயற்கையையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதில் மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டியது மிக அவசியமாகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளிற்கான சிறப்பு Theme அதாவது கருத்து ஒன்று முன்னரே முடிவெடுக்கப்படும். இருப்பினும், இந்த ஆண்டு தொற்றுநோய் காரணமாக உலகளாவிய தீம் முடிவு செய்யப்படவில்லை.

இயற்கை வளங்கள் மிக விரைவான விகிதத்தில் குறைந்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மக்கள்தொகை அதிகரிப்பு. தொழில்நுட்ப முன்னேற்றமும் ஆடம்பரமான வாழ்க்கை முறையும், புவி வெப்பமடைதல், ஓசோன் லேயரில் சேதம் (Ozone Layer Depletion), காட்டுத் தீ, போன்ற பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன.

இயற்கையில் சமநிலையை நிலைநிறுத்துவதற்கு பொது மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும். நம் தினசரி வாழ்வில் சில நடவடிக்கைகளை மெற்கொண்டாலே இயற்கையை பாதுகாக்க நம்மாலான பணியை செய்த திருப்தியை நாம் பெறலாம். அவை என்னவென்று கீழே காணலாம்:

 - முடிந்தவரை, உணவு, நீர் மற்றும் வழக்கமான பயன்பாட்டின் பொருட்களை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். தேவைக்கேற்ற உபயோகத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

- பயன்பாட்டில் இல்லாதபோது விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களை அணைப்பதன் மூலம் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.

- தண்ணீரை வீணாக்குவதைத் தவிர்க்க, கை கால் துலக்கிய பறகும், மற்ற பயன்பாடுகளுக்குப் பிறகும் குழாயை நன்றாக மூட வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த சிறிய செயல்களை செய்து நாம் வளங்களைப் பாதுகாப்பதில் நமது பங்களிப்பை அளிக்கலாம்.

இயற்கை சீராக இருந்தால், வளங்கள் வீணாக்கப்படாமல் இருந்தால், பூமி செழிப்பாய் இருக்கும்.

ALSO READ: ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?

தூய்மையான இயற்கையும் இயற்கையின் வளங்களும் நமக்கு மட்டும் உரித்தானது அல்ல. நம் முன்னோர்கள் நமக்கு அவற்றை அளித்தார்கள். அதை பாதுகாத்து நமது அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். இதை விட பெரிய பரிசை நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.  

Trending News