புதுடெல்லி: தீபாவளி என்றால் தீபங்களை வரிசையாக ஏற்றி வணங்கும் தீபாவளி என்பதும், நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த நாள் என்றும் நாம் கொண்டாடுகிறோம். நமது அண்ட நாடான நோபாளத்தில் கொண்டாடப்படும் தீபாவளியின் நாய்களுக்கு மரியாதை செய்யப்படுவதன் காரணம் என்ன தெரியுமா? நேபாளத்தில் வசிக்கும் இந்துக்களின் இரண்டாவது பெரிய பண்டிகை தீபாவளி ஆகும். அந்நாட்டில் தீபாவளிக்கு யமபஞ்சக் என்றும் பெயர் உண்டு. நேபாளத்தில் கொண்டாடப்படும் தீபாவளிக்கும் இந்தியாவில் அனுசரிக்கப்படும் தீபாவளிக்கும் சில வேறுபாடுகள் உண்டு.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் தீபாவளியைக் கொண்டாடுவதைப் போலவே, நேபாளத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் நேபாளத்தின் தீபாவளிக்கு யமபஞ்சக் தீபாவளியில், விலங்குகளுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் குறிப்பாக பண்டிகையின் இரண்டாம் நாள் நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் நாளை தீபாவளி கொண்டாடப்படுகிறது.


மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!


நமது தீபாவளியைப் போலவே, வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டாடப்படும் தீபாவளியின் கருப்பொருள் மாறுபடுகிறது. திஹார் பண்டிகை, எமனுடன் தொடர்புடையதாகும். நான்கு நாட்கள் விலங்குகளுக்காக கொண்டாடப்படும் தீபாவளியின் ஐந்தாம் நாள் தான் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


நேபாளத்தின் தீபாவளியானது, விக்ரம் சம்வத் நாட்காட்டியின்படி, கார்த்திகை கிருஷ்ண பக்ஷத்தின் த்ரயோதசி திதியில் தொடங்கும் தீபாவளி பண்டிகையின்  முதல் நாள் காகத்துடன் தொடர்புடையது. நேபாளத்தின் பல்வேறு சமூகங்கள் திஹாரை வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகின்றன. இந்த விழா நெவார்களிடையே ஸ்வந்தி என்றும், மாதேசிகளிடையே தீபாவளி என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!


இந்தியாவைப்போலவே, தீபாவளியன்று வீடுகள், வாசல்களில் அரிசி மாவு, வண்ணங்கள், மலர் இதழ்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி கோலங்களைப் போடுகின்றனர். வண்ணமயமான ரங்கோலி தீபாவளிக்கு கட்டியம் கூறுகிறது.  


நேபாளத்தில், தீபாவளியின் இரண்டாவது நாள் குகூர் (நாய்) திகார் என்று அழைக்கப்படுகிறது, இந்நாளில், செல்லப்பிராணிகளாக இருந்தாலும் சரி, தெருநாய்களாக இருந்தாலும் சரி, அனைத்து நாய்களுக்கும் விருந்து அளித்து, நெற்றியில் திலகமிட்டு, கழுத்தில் சாமந்தி மலர் மாலையும் அணிந்து மக்கள் வழிபடுவார்கள்.


இந்த நாள் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான சிறப்பு உறவைக் குறிக்கிறது. மகாபாரதக் கதைய்ன்படி, சொர்க்கத்திற்கு செல்லும் தர்மர் யுதிஷ்டிரர், தன்னுடன் வரும் நாய்க்கு இடம் கொடுக்காததால், சொர்க்க வாசமே வேண்டாம் என்று சொல்ல்லி சொர்க்கத்திற்குள் நுழைய மறுக்கிறார், தர்மர் என்று அழைக்கப்படும் யுதிஷ்டிரர், கடவுள் யமனின் ரூபம் என்று சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | திருப்பதியில் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கண்டனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ