இந்தியா - சீனா - பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால் சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் டோக்லாம் பதற்றத்தை தனிக்க இந்தியா - சீனா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறிஉள்ளது.


சிக்கிம் செக்டாரில் இந்திய மற்றும் சீன ராணுவம் இடையே மோதலான போக்கு நிலவுவதற்கு கவலையை வெளிப்படுத்தி உள்ள அமெரிக்கா இருதரப்பும் எல்லையில் பதற்றத்தை தணிக்க நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் ஊக்குவிக்கிறோம் என கூறியுள்ளது. 


அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளார் ஹீத்தர் நாவேர்த் தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது பேசியது:- “இந்தியா - சீனா இடையே நிலவும் இந்த சூழ்நிலை அமெரிக்காவிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 


இவர்கள் இருதரப்பும் அமைதிக்காக சிறந்த ஒப்பந்தத்திற்கு வரவேண்டும், அதற்கு இருதரப்பும் பணியாற்ற வேண்டும், எல்லையில் பதற்றத்தை தணிக்க நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா மற்றும் சீனாவை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.