COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 45-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. குடியரசுக்கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டார்கள். மொத்தம் 50 மாகாணத்தில் உள்ள 538 பிரதிநிதிகள் ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறும் நபர் அதிபராக தேர்வு செய்யப்படுவார். 


தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஹிலாரியே வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமாக நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆரம்பத்தில் இருவருக்கும் இழுபறி ஏற்பட்டது.  ஆனால் முக்கிய மாகாணங்களில் டிரம்ப் ஒட்டுமொத்த வெற்றியை பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 288(47.9%) இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 215(47.%) இடங்களிலும் வாக்குகள் பெற்றுள்ளனர்.


அதை தொடர்ந்து பெண்கள், சிறுபான்மையினர், அகதிகள் பற்றிய அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. 12 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். அமெரிக்க அதிபராக பதவி வகிக்க டிரம்ப் தகுதியற்றவர் என அவரது கட்சியிலும் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.  இதையெல்லாம் மீறி எந்த ஒரு அரசியல் பதவியும் வகிக்காத டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


டிசம்பர் 19-ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் செனட்டர்கள் கூடி முறைப்படி டிரம்ப்பை அதிபராக தேர்வு செய்ய உள்ளனர். அவர் 2017 ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்பார். எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரியும் அவரை வாழ்த்தினார். அப்போது ஒன்றுபட்டு இணைந்து செயல்பட்டு அமெரிக்காவை உயர்த்த பாடுபடுவோம் என்றார்.


ஹிலாரி வாழ்த்து:-


இதேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் என ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். டொனால்டு டிரம்ப் அதிபர் என்பதை திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும் என ஆதரவாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் ஹிலாரி கிளின்டன் தகவல் தெரிவித்துள்ளார். 


வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் முன் டிரம்ப்பை தொடர்பு கொண்ட ஹிலாரி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்தினார்.