White House-லிருந்து கிளம்பும் Trump ‘பிழைத்துப் போ’ என யாரையெல்லாம் மன்னித்துள்ளார்?
கலிபோர்னியாவின் முன்னாள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகளான டங்கன் ஹண்டர் மற்றும் நியூயார்க்கின் கிறிஸ் காலின்ஸ் ஆகியோருக்கும் டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
இன்னும் சில நாட்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறவுள்ளார். அதற்கு முன்னர் பல முக்கிய செயல்களை அவர் செய்து வருகிறார். வழக்கமாக, அமெரிக்க அதிபர்கள் வெள்ளை மாளிகையிலிருந்து கிளம்பும் முன்னர், பலருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகளும், பலரை மன்னிக்கும் நிகழ்வுகளும் நடக்கும்.
அவ்வகையில் டொனால்ட் டிரம்பும் ஒரு பட்டியலை தயார் செய்துள்ளார். பல ரிபப்லிகன் கட்சி உறுப்பினர்கள், ரஷ்ய விசாரணையில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு 2016 ஆம் ஆண்டு தேர்தலின் பிரச்சார அதிகாரி, 2007 ஆம் ஆண்டு பாக்தாத்தில் நடந்த படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் உட்பட 15 பேருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) செவ்வாய்க்கிழமை மன்னிப்பு வழங்கினார்.
மன்னிப்பில், 2016 முதன்மைத் தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரச்சார உதவியாளர் ஜார்ஜ் பாபடோபௌலோஸ் என்பவரும் அடங்குவார்.
கலிபோர்னியாவின் (California) முன்னாள் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகளான டங்கன் ஹண்டர் மற்றும் நியூயார்க்கின் கிறிஸ் காலின்ஸ் ஆகியோருக்கும் டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
காங்கிரசில் உள்ள டிரம்ப் கூட்டாளிகளின் பரிந்துரையின் பேரிலும், சில சந்தர்ப்பங்களில், பழமைவாத ஊடகங்களின் வற்புறுத்தலிலும் இந்த மன்னிப்புகள் வந்தன.
ALSO READ: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ள ட்ரம்ப்..!!
33 வயதான பாபடோபௌலஸ் டிரம்பின் 2016 பிரச்சாரத்திற்கு ஆலோசகராக இருந்தவர். ரஷ்ய (Russia) உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறும் நபர்களுடனான தனது தொடர்புகளின் நேரம் மற்றும் முக்கியத்துவம் குறித்து FBI முகவர்களிடம் பொய் சொன்னதாக அவர் 2017 ல் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பிரச்சார நிதிகளை திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹண்டருக்கு 11 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டிரம்பை அதிபராக ஒப்புக் கொண்ட காங்கிரசின் முதல் உறுப்பினரான கொலின்சுக்கு, இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் மத்திய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட மன்னிப்புகளில் டச்சு வழக்கறிஞரான அலெக்ஸ் வான் டெர் ஸ்வானும் உள்ளார். முல்லர் புலனாய்வாளர்களிடம் பொய் சொன்னதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நிராயுதபாணியான ஆவணமற்ற புலம்பெயர்ந்தவரை சுட்டுக் காயப்படுத்திய குற்றத்திற்கான 2006 ஆம் ஆண்டில் தண்டிக்கப்பட்ட இரண்டு எல்லை ரோந்து முகவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்கு தண்டனை பெற்று நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் பலருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஜான்சனின் பரிந்துரையின் பேரில், போதைப் பொருள் வழக்குகளின் தண்டிக்கப்பட்டுள்ள கிரிஸ்டல் முனோஸ், டைனிஸ் நிக்கோல் ஹால் மற்றும் ஜூடித் நெக்ரான் ஆகிய மூன்று பெண்களின் தண்டனையையும் டிரம்ப் குறைத்தார். ஜான்சன் சிறை கைதிகள் சார்பாக பல சமூக நலப்பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: பரவும் புதிய வகை கொரோனாவைரஸ் இன்னும் நம் கட்டுக்குள்தான் உள்ளது: WHO
கடந்த மாதம், ரஷ்யாவின் விசாரணையின் போது FBI- யிடம் பொய் சொன்னதாக இரண்டு முறை குற்றத்தை ஒப்புக்கொண்ட தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின்னை டிரம்ப் மன்னித்தார். ஃப்ளினுக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பு ஜனநாயக கட்சியை (Republicans) சேர்ந்தவர்கள் மற்றும் பிற விமர்சகர்களிடமிருந்து கண்டனத்தை ஈர்த்தது.
ஜூலை மாதம், டிரம்ப் நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை மாற்றினார். 2016 தேர்தலில் ரஷ்ய தலையீட்டை விசாரித்த அதிகாரிகளிடம் பொய் கூறிய குற்றத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் டிரம்ப் அவரை சிறையிலிருந்து விடுவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR