வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். எனினும் டொனால்ட் டிரம்ப், அமைதியான முறையில் பதவியில் இருந்து விலகுவார் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. வெள்ளை மாளிகையில் தனக்கு மிச்சமிருக்கும் காலத்தில் அவர் பதவியேற்கவிருக்கும் ஜோ பிடனுக்கான (Joe Biden) பொறுப்புகளை இரு மடங்காக அதிகரித்து, அவருக்கு பிரச்சனைகளை மேலும் விரிவாக்கக்கூடும் என முன்னாள் அதிகாரிகளும் அரசியல் வல்லுனர்களும் நம்புகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 தொற்றுநோய் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நிலைமைகளுக்கு பெய்ஜிங்கை குற்றம் சாட்ட டிரம்ப் பலமுறை முயன்றதால், சீனா ஒரு குறிப்பிட்ட இலக்காக இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் மேலும் கூறியுள்ளனர் என்று தென் சீனா மார்னிங் போஸ்டில் மார்க் மேக்னியர் கூறுகிறார்.


சிஞ்சியாங்கில் உய்குர் முஸ்லீம்களுக்கு கொடுமைகளை இழத்ததற்காக, சீனாவை இனப்படுகொலைக்கு குற்றவாளி என்று முத்திரை குத்துவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பதைத் தாண்டி, ட்ரம்ப் மேலும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு விசாக்களைத் தடுக்க முயற்சிக்கலாம் அல்லது அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்கைத் தவிர்க்குமாறு உத்தரவிடுவதன் மூலம் சிக்கலை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகின்றது.


சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்துதல், 'இரட்டை பயன்பாடு' சிவில்-ராணுவ ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துதல், TikTok மற்றும் WeChat-க்குப் பிறகு, இன்னும் அதிகமான சீன செயலிகளை தடை செய்வது மற்றும் 5 ஜி-ஐத் தாண்டி ஹவாய் டெக்னாலஜிஸுக்கு அனைத்து செமி கண்டக்டர் விற்பனையையும் தடுப்பது ஆகியவை டிரம்ப் எடுக்கக்கூடும் அதிரடி நடவடிக்கைகளில் சிலவாக இருக்கலாம்.  


பிடன் நிர்வாகத்திற்கு சீனாவை (China) சமாளிப்பது ஒரு தர்மசங்கடமான விஷயமாக இருக்கலாம்.


பியூ ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி, அமெரிக்கர்களில் 73 சதவீதம் பேர் சீனாவைப் பற்றி எதிர்மறையான பார்வையை வைத்திருக்கிறார்கள். இது கடந்த ஆண்டை விட 13 புள்ளிகள் அதிகமாகும். டிரம்ப் பதவியேற்ற 2017 ஆம் ஆண்டை விட 20 புள்ளிகள் அதிகமாகும்.


ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, தேர்தல் இன்னும் முடியவில்லை என்று கூறி, தனது மறுதேர்தல் பிரச்சாரத்தால் சட்ட சவால்களை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.


ALSO READ: Donald Trump: அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியா..!!!!


இதற்கிடையில், அமெரிக்க அரசாங்கம் கிழக்கு துர்க்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை அதன் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் நீக்கியது. இது சீனாவின் பயங்கரவாத எதிர்ப்பு சாக்குப்போக்கு பலவீனமடைய வழிவகுத்தது.


முஸ்லீம் சிறுபான்மையினரின் பெரும் மக்கள் முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிஞ்சியாங்கில் சீனாவின் கொள்கைகளை உலக நாடுகள் கண்டனம் செய்ததன் மத்தியில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


ஜின்ஜியாங்கில் முஸ்லீம் மக்களில் ஏழு சதவீதம் பேர் அரசியல் முகாம்களின் விரிவாக்க வலையமைப்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா (United Nations) நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இருப்பினும், சீனா இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த முகாம்களில் தொழில் பயிற்சி அளிக்கப்படுவதாக சீனா கூறுகிறது.


இந்த முகாம்களில் உள்ளவர்கள் தங்களது மதத்தை பின்பற்றுவதற்கோ அல்லது தங்கள் மொழியைப் பேசுவதற்கோ தடை உள்ளது என்றும் கட்டாய அரசியல் அறிவுறுத்தல், சித்திரவதை, அடித்தல் மற்றும் உணவு மற்றும் மருந்து மறுப்பு ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளனர்.


டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால், இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களில்,பாகிஸ்தானையும் சீனாவையும் அவர்கள் செய்த குற்றங்களுக்காக அவ்வப்போது தட்டிக்கேட்ட ஒரே அதிபர் அவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை. கொரோனா தொற்று கையாளப்பட்டதே அவர் தோல்விக்கு பெரிய காரணமாக பார்க்கப்படுகின்றது. அந்த கொரோனா தொற்றுக்கு காரணமான சீனாவை சீண்டிப்பார்க்காமல் அவர் பதவியிலிருந்து விலக மாட்டார் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.


ALSO READ: US Elections: அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பிடன்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR