கொரோனா வைரஸ் பிரச்சினையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா உலகிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump) ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், நான் முன்பு கூறிய விஷயத்தை இப்போது எல்லோரும், எதிரிகள் கூட,  ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார். சீனாவின் (China) வுஹான் ஆய்வகத்தில் இருந்து தோன்றிய சீன வைரஸ் குறித்து நான் சொன்னது சரி தான், அதை இப்போது  அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயின் ரிஷிமூலத்தை குறிப்பிடும் வகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வந்தார்.  இப்போது டொனால்ட் டிரம்பின் எதிரி எனக் கூறப்படும் அனைவருமே கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து உருவானது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்று ட்ரம்ப் கூறினார்.


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் உலகிற்கு சீனா 10 டிரில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என்று கூறினார். பேஸ்புக் (Facebook) -ட்விட்டர் (Twitter) போன்ற சமூக ஊடக நிறுவனங்களில் பதிவிட  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


ALSO READ | பிரதமர் மோடியை தொலைபேசியின் தொடர்பு கொண்டு பேசினார் கமலா ஹாரிஸ்


சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவானது என்பது குறித்து உலகம் முழுவதிலுமிருந்து பல வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பிரிட்டனும் இந்தியாவும் பிடென் நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா தொடர்பாக புதிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரியுள்ளன. அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்புக்கும் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சீனாவின் வுஹான் நகரில் கொரோனாவின் முதல் தொற்று பதிவாகியது.


உலகெங்கிலும் பீதியை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது . தனது இந்த கருத்து மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், வுஹானில் உள்ள உயிரியல் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் தயாரானது என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.


ALSO READ | Israel: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நாற்காலியை அசைத்து பார்க்கும் பென்னட்..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR