இஸ்ரேலில் (Isreal) தற்போது அரசியல் பரபரப்பு நிலவுகிறது.அங்கு இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) பதவியிலிருந்து நீக்க, தற்போதும் எதிர்கட்சிகள் கை கோர்த்துள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் (Israel - Hamas) இடையிலான மோதல்கள் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று வந்த நிலையில், மூன்றாம் உலகப் போராக அது உருவெடுக்குமா என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்கு செய்தியாக, வெள்ளிக்கிழமை (மே 21, 2021), இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இப்போது அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு
இஸ்ரேலில், நெதென்யாகுவை (Benjamin Netanyahu) பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட எதிர் கட்சிகள், கை கோர்த்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தொழில்நுட்பத் துறை தொழில் அதிபரான, நஃப்டாலி பென்னட் பிரதமராக இருப்பார் என கூறப்படுகிறது. 49 வயதாகும் அவர், பிரதமர் பதவியில் சுமார் இரண்டு ஆண்டுகள் நீடிப்பார் எனவும், அதன் பின், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நிதி அமைச்சருமான லாப்பிட் (57) என்பவர் பிரதமராக இருப்பார் என கூறப்படுகிறது.
நஃப்டாலி பென்னட் (Naftali Bennett) தீவிர வலதுசாரி கொள்கை கொண்டவர் என்பவர். இவரது யாமினா கட்சி, தீவிர பாலஸ்தீன எதிர்ப்பும், அதி தீவிர யூத கொள்கையும் கொண்ட கட்சி என்பதால், பாலஸ்தீனத்திற்கு தலைவலி அதிகரிக்கலாம். குறிப்பாக, அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நேரத்தில், பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு கரை பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்தவர் நஃப்டாலி பென்னட் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | இஸ்ரேலில் முடிவுக்கு வருகிறதா நெதன்யாகுவின் சகாப்தம்; கட்டம் கட்டும் எதிர்க்கட்சிகள்
நெதென்யாகுவை பதவியில் இருந்து நீக்குவதில் வெற்றி பெற்று, புதிய அரசாங்கம், பதவியேற்றால், அந்த ஆட்சிக்கு கணிசமான சவால்களை காத்திருக்கின்றன. ஈரான், பாலஸ்தீனியர்களுடனான சமாதான முயற்சிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போர்க்குற்ற விசாரணை, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பது உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன.
ALSO READ | ஹமாஸ் ஏவிய ராக்கெடுக்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாத்த Iron Dome
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR