வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா செல்வதற்கு முன்பே டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது விரைவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'அங்கு நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22 ஆம் தேதி ஹுஸ்டனில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பிரதமர் மோடியின் 'ஹவுடி மோடி' (Howdy Modi) நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு அமெரிக்காவில் ஒருவருக்கொருவர் 'ஹவுடி' என்று நட்பு பாணியில் அழைக்கும் பழக்கம் உள்ளது. ஹவுடி என்பது (How do you do) நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமாகும்.


பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயண திட்டம்:- 


21 செப்டம்பர் 2019 (மாலை): அமெரிக்க சுற்றுப்பயணத்தில் முதலில் பிரதமர் மோடி ஹூஸ்டனுக்கு செல்வார்.
22 செப்டம்பர் 2019 (இரவு 8:30 மணி): ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்வில் பங்கேற்பார். 
23 செப்டம்பர் 2019: 2019 காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் உரையாற்றுவார்.
24 செப்டம்பர் 2019: மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்வை ஐ.நா தலைமையகத்தில் நடக்க உள்ளது.
24 செப்டம்பர் 2019: பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் பிரதமர் மோடிக்கு மரியாதை
24 செப்டம்பர் 2019: மோடிக்கு 2019 உலகளாவிய கோல்கீப்பர் விருது வழங்கப்படும்
24 செப்டம்பர் 2019: நியூயார்க்கின் மாநில பல்கலைக்கழகத்தில் 'காந்தி அமைதித் தோட்டம்' தொடங்கும் விழா.
25 செப்டம்பர் 2019: 'குளோபல் வர்த்தக மன்றம்' தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்கிறார்.
25 செப்டம்பர் 2019: 'குளோபல் பிசினஸ் மன்றத்தின் மைக்கேல் ப்ளூம்பெர்க்குடன் பேசுகிறார்.
25-26 செப்டம்பர் 2019: வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பை நடத்துகிறார் பிரதமர் மோடி.
27 செப்டம்பர் 2019: ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.