முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிரந்தரமாக முடக்கியது. வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால் அதிபர் ட்ரம்பின் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் (Twitter) விளக்கம் அளித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் தனது கணக்கை மீட்டெடுக்க ட்விட்டரை (Twitter) கட்டாயப்படுத்துமாறு அமெரிக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ட்விட்டர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக  டிரம்பின் வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை மியாமியில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.


அப்போது அதிபராக இருந்த ட்ரம்பின் உரிமைகள் மீறப்பட்டதாக வாதிட்ட டிரம்ப் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். ட்ரம்ப் தாக்கல்  செய்த மனு குறித்து ட்விட்டர் (Twitter) சனிக்கிழமை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. 


ALSO READ | அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்; என்ன காரணம் தெரியுமா?


அதிபர் தேர்தலில் ஜோ பிடனின்  வெற்றி பெற்றதை ஆங்கீகரித்து சான்றளிக்கும்  நிகழ்வின் போது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் கட்டிடத்தை முற்றுகையிட்டதால ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, ட்ரம்ப் கணக்கை  நிரந்தரமாக தடை செய்தது. ட்ரம்ப்  பதிவுகள் காரணமாக மேலும் வன்முறையை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதாக ட்விட்டர் காரணம் தெரிவித்தது.  ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு தடை செய்த, ட்ரம்பிற்கு சுமார் 89 மில்லியன் பாலோயர்ஸ் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


டிரம்ப் வன்முறையைத் தூண்டிவிடுவார் என்ற அச்சம் காரணமாக ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் ட்ரம்ப் இடைநீக்கம் செய்யப்பட்டார். பேஸ்புக்கின் தடை இரண்டு ஆண்டுகள், அதாவது ஜனவரி 7, 2023 வரை நீடிக்கும். அதன் பிறகு நிறுவனம் அவரது சஸ்பெண்ட் முடிவை  மறுபரிசீலனை செய்யும். எனினும் யூடியூப்பின் தடை காலவரையற்ற தடை என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜூலை மாதம், டிரம்ப் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் புளோரிடாவின் தெற்கு மாவட்டத்தில், ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ஆகிய மூன்று தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது


ALSO READ | ட்ரம்ப்-ன் யூடியூப் சேனலும் முடக்கம்; விதிகளை மீறியதாக யூடியூப் நிறுவனம் அதிரடி!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR