பாகிஸ்தான், ஒருபுறம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்கு பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. எரிபொருள், உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இலவசமாக கோதுமை மாவு பெற ம்க்கள் அதிக அளவில் அலைமோதுவதால், நெரிசல் ஏற்பட்டு, அதில் மக்கள் உயிர் இழக்கின்றனர். இதற்கிடையில், பாகிஸ்தான் கடற்படையின் முன் இரட்டை சவால் எழுந்துள்ளது. அதன் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பேட்டரிகள் இல்லை. மறுபுறம் கட்டுமானத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான இயந்திரங்கள் இல்லை. நீர்மூழ்கிக் கப்பலை இயக்குவதற்கு பேட்டரி இன்றியமையாதது. நீர்மூழ்கிக் கப்பலின் பேட்டரிக்காக கிரீஸ் உதவ வேண்டும் பாகிஸ்தான் கோரியிருந்தது. ஆனால் கிரீஸ் இந்த கோரிக்கையை நிராகரித்து. பாகிஸ்தானுக்கு கிரீஸ் மறுப்பு தெரிவித்தது, இந்தியாவுக்கு கிடைத்த பெரிய ராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது. கிரீஸ் இந்தியாவின் நல்ல நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா விடுத்த கோரிக்கை


உண்மையில், பாகிஸ்தானுக்கு பாதுகாப்புப் பொருட்களை வழங்க வேண்டாம் என்று இந்தியா கடந்த ஆண்டு கிரேக்கத்திடம் கோரிக்கை விடுத்தது, அதை ஏற்றுக்கொண்ட கிரீஸ் பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல் பேட்டரிகளை வழங்க மறுத்தது. உண்மையில், பிரான்சில் தயாரிக்கப்பட்ட ஐந்து அகோஸ்டா (Agosta) (மூன்று 9 பி மற்றும் இரண்டு 70 பி) ரக நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான பேட்டரிகளை பாகிஸ்தான் கேட்டிருந்தது. வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியில் இருக்கும்போது பேட்டரிகளிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன. கிரீஸ் நாட்டில் ஆயுதங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.


பாகிஸ்தானின் நண்பன் துருக்கிதான் கிரீஸின் மிகப் பெரிய எதிரியாக உள்ள நிலையில், கிரீஸ், பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.  கிரீஸ் புதிய பேட்டரிகளை மறுத்த நிலையில், ஒரு கிரேக்க நிறுவனத்தின் துணை ஒப்பந்தக்காரரிடம் உதவி பெற முயற்சிக்கிறது பாகிஸ்தான். சேவை செய்வதிலும் பாகிஸ்தான் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​பாகிஸ்தான் அனைத்து தரப்பிலிருந்தும் பிரச்சனைகளால் சூழப்பட்டிருப்பதாக தெரிகிறது. சீனா கட்டும் எட்டு ஹேங்கர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களும் தாமதமாகி வருகின்றன.


மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!


நீர்மூழ்கிக் கப்பல் கிடைப்பதில் தாமதம்


உண்மையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முதல் நீர்மூழ்கிக் கப்பலையும், மார்ச் 2023க்குள் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலையும் பாகிஸ்தான் பெற இருந்தது. இவற்றில் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவிலும் மற்றவை கராச்சியிலும் கட்டப்படவுள்ளன. இதன் இன்ஜின் மேற்கத்திய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட இருந்ததால், தாமதமாகி வருகிறது. அதற்குக் காரணம், மேற்கத்திய நாடுகளுடனான சீனாவின் உறவில் இருக்கும் பதற்ற நிலை. அதனால்தான் மேலை நாடுகள் சீனாவுடன் வலுவான ஆயுதத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. இதன் மூலம் பாகிஸ்தான் பயனடையும் என நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | சமையல் எரிவாயுவுக்கும் ரேஷன்! பொருளாதார நெருக்கடியில் சீரழியும் பாகிஸ்தான் மக்கள்


மேலும் படிக்க |  இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை! பேத்தியை மகளாக்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ