பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்துக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான்


இந்நிலையில், தனது வரலாற்றில், இது வரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) உட்பட பல இடங்களிலிருந்து உதவியைப் பெற்றுள்ளது, ஆனால் கடன் உதவி கிடைத்த போதிலும்,, நாட்டின் நிலைமையில் மாற்றம் ஏதும் இல்லை. சிக்கன் விலை விண்னை தொட்டுள்ள நிலையில், அதனை வாங்கமுடியாமல் தவிர்த்து வரும் மக்கள், முட்டை கூட வாங்க முடியாத அளவுக்கு பணவீக்க நிலை உள்ளது. பாகிஸ்தானின் லாகூரில் 12 முட்டைகளின் விலை ரூ.400-ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | திக்குமுக்காடும் ஏமன்... அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல் - பின்னணி என்ன?


விண்ணை தொடும் முட்டை மற்றும் வெங்காயம் விலைகள்


பாகிஸ்தான் செய்தி நிறுவனமான ARY வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் வரும் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது, ஆனால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ளது மட்டுமின்றி இங்குள்ள மக்களின் நிலையும் பரிதாபமாகி வருகிறது. ஜனவரி 15 அன்று, லாகூரில் ஒரு டஜன் முட்டையின் விலை 400 பாகிஸ்தான் ரூபாயை எட்டியது. முட்டை மட்டுமல்ல வெங்காயம் கூட பாகிஸ்தானியர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. பாகிஸ்தானில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.230 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அரசாங்கம் அதன் விலையை கிலோவுக்கு ரூ.175 என நிர்ணயித்துள்ளது.


சிக்கன் கிலோ ரூ.615க்கு விற்பனை செய்யப்படுகிறது


முட்டை, வெங்காயம் மட்டுமின்றி, பாகிஸ்தானில்  சிக்கன் கறியின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அறிக்கையின்படி, லாகூரில் ஒரு கிலோ  சிக்கன் கறி ரூ.615க்கு கிடைக்கிறது. இது தவிர, நாட்டு மக்கள் அன்றாடப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பணவீக்கத்தின் பாதிப்பை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இங்கு பால் லிட்டர் ரூ.213க்கும், அரிசி கிலோ ரூ.328க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பழங்களைப் பற்றி பேசுகையில், ஒரு கிலோ ஆப்பிள் விலை 273 ரூபாயை எட்டியுள்ளது, அதே நேரத்தில் தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


பதுக்கல் செய்வதை நிறுத்துவதற்கான வழிமுறைகள் 


கடந்த மாதம் நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு (ECC) தேசிய விலைக் கண்காணிப்புக் குழுவிற்கு (NPMC) விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், பதுக்கல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் மாகாண அரசாங்கங்களுடன் ஒருங்கிணைக்க உத்தரவிட்டது. பாகிஸ்தான் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த கூட்டத்திற்கு மத்திய நிதி, வருவாய் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான தற்காலிக மந்திரி டாக்டர் ஷம்ஷாத் அக்தர் தலைமை தாங்கினார்.


பண உதவிக்குப் பிறகும் பணவீக்கம் கட்டுக்குள் வராத பணவீக்கம்


பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த பல வருடங்களாக கடும் சரிவை சந்தித்து வருவதும், கட்டுப்பாடற்ற பணவீக்கம் குறிப்பாக ஏழை மக்களின் நிலையை பரிதாபமாக ஆக்கியுள்ளது மற்றும் அவர்கள் வாழ்வது கடினமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், நாட்டில் பண நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 பில்லியன் டாலர் பிணை எடுப்புப் பொதியின் இரண்டு தவணைகளுக்கு IMF ஒப்புதல் அளித்திருக்கும் நேரத்தில் பாகிஸ்தானின் இந்த நிலைமை. இதன் கீழ், ஆரம்ப தவணையான 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜூலை 2023 இல் IMF ஆல் வெளியிடப்பட்டது, இப்போது இரண்டாவது தவணையாக 700 மில்லியன் அமெரிக்க டாலர்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | இஸ்ரேல் - ஹமாஸ் போர்... 100 நாட்களில் 10,000 குழந்தைகள் பலி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ