பெய்ஜிங்: சீனாவில் ஜி ஜின்பிங் பொறுப்பேற்றதில் இருந்து, சீனா, நாட்டில் பல அடக்குமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அடக்கு முறைக்கு சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாது, அலிபாபா போன்ற பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் அடக்குமுறி காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பலரது இருப்பிடம் கூட சரியாக தெரியவில்லை. விதி மீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு,  தொடர்ச்சியான விசாரணைகளை எதிர்கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகள் வீடியோ கேம்களை விளையாடுவதற்கு அனுமதிக்கப்படும் மணிநேரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், பிரபல ரசிகர்களின் கலாச்சாரத்தை முறியடித்தல் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்களின் வரம்புகள் ஆகியவை இந்த விதிமுறைகளில் அடங்கும். கடந்த 15 ஆண்டுகளில் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கு வியத்தகு முறையில் இருந்ததால், அவர்களை கட்டுபாட்டில் கொண்டு வருவதற்காக, இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று ஹாங்காங் போஸ்ட் தெரிவித்துள்ளது. தற்போது சீனாவின் பணக்கார பெண்மணி என்று அழைக்கப்படும் யாங் ஹுயான், ஐரோப்பிய யூனியன் குடியுரிமைக்கு விண்ணப்பித்து சைப்ரஸில் "கோல்டன் பாஸ்போர்ட்" பெற்றுள்ளார் என்று ஊடகம் மேற்கோள் காட்டிய சமீபத்தில் கசிந்த அறிக்கை ஒன்று கூறியது.


மனித உரிமை ஆர்வலர்கள் அல்லது ஜனநாயகத்தை ஆதரிக்கும் மற்றும் எதிரொலிக்கும் எவரும் சீன அரசாங்கத்தால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன சிறுபான்மையினரை ஒடுக்குவது சீனாவில் இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், ஜி ஜின்பிங்கின் அடக்குமுறைக் கொள்கைகளால் 6,00,000-க்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் சீனாவிடம் தஞ்சம் கோரியுள்ளதாக அகதிகளுக்கான ஐநா உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் விசாக்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் தடுப்புக்காவல் மற்றும் வெளியேற்றத்திற்கு உள்ளான நிகழ்வுகளும் உள்ளன. ஹாங்காங்கில், 2020 இல் மட்டும் 93,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேறினர், அதேசமயம் 2021 இல் எண்ணிக்கை 23,000 ஆக இருந்தது.


மேலும் படிக்க |  இலங்கை வழியில் செல்லும் வங்க தேசம்; எரிபொருள் விலைகள் 51% அதிகரிப்பு


மேலும் கொரோனா தொற்று பரவலை அடுத்து கடுமையான அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அதன் விளைவாக கடுமையான லாக்டவுன் காரணமாக சீன நாட்டினரைத் தவிர, வெளிநாட்டு குடிமக்களும் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, ஜி ஜின்பிங் அதிபராகப் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டில் மட்டுமல்ல, உள்நாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.


சீன அதிபரது அடக்குமுறை கொள்கைகள், அதிக மாசு அளவுகள், சிவில் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான  ஒடுக்குமுறை காரணமாக குடிமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அச்சம் மற்றும் செல்வந்தர்களைச் சுற்றி வட்டமிடும் சந்தேகம் ஆகியவை தற்போதைய சூழலில் மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர். 


மேலும் படிக்க | தைவானில் கால் வைத்த நான்சி பெலோசி : சீனா இனி என்ன செய்யும்?


மேலும் படிக்க | 8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ