மெக்ஸிகோ: நிலநடுக்கம் காரணமாக இதுவரை 10 பேர் பலி; 2 டஜன் பேர் காயம்
மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். அங்கு ரிக்டர் அளவு 7.4 என பதிவானது.
வாஷிங்டன்: கடந்த செவ்வாய்க்கிழமை காலை தெற்கு மெக்ஸிகோவில் (Mexico) ஏற்பட்ட பூகம்பத்தால் (Earthquake) பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோவின் தேசிய நில அதிர்வு சேவையின் அறிக்கை படி நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவு என மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் யு.எஸ். புவியியல் ஆய்வு 7.4 என மதிப்பிட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, இந்த பூகம்பத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் இரண்டு டஜன் பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் 21 மருத்துவமனைகள் உட்பட பல கட்டிடங்களின் கட்டமைப்பு சேதத்தை சந்தித்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல சுமார் 200 வீடுகள் சேதமடைந்தன, அதில் 30 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்றைய நிலவரப்படி மேலும் மூன்று பேர் இறந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மெக்ஸிகோவின் (Mexico) தென் மாநிலமான ஓக்ஸாக்காவை பசிபிக் பெருங்கடலில் இருந்து 14 மைல் தூரம் மற்றும் 16 மைல் ஆழத்தின் மையப்பகுதியுடன் டெம்ப்ளோர் தாக்கியது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டது.
1985 இல் மெக்சிகோவில் 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (Earthquake) மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரழிவில் குறைந்தது 5000 பேர் கொல்லப்பட்டனர்.
இப்பகுதி 1537 மற்றும் 1787 ஆம் ஆண்டுகளிலிருந்து பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் காட்டுகிறது. 1985 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மெக்ஸிகோவும் பெரிய பூகம்பங்களை எதிர்கொண்டது. நாட்டின் தலைநகரம் 8.1 மற்றும் 8.2 ரிக்டர் அளவிலான நடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டில், பூகம்பத்தின் பின்னர் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2017 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த பூகம்பம் காரணமாக பல மில்லியன் கணக்கான சொத்துக்கு சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.