வாஷிங்டன்: செவ்வாயன்று, வட அமெரிக்காவில் (US) உள்ள மெக்ஸிகோவில் (Mexico) நாட்டில் பூகம்பத்தின் (Earthquake) கூர்மையான அதிர்ச்சி ஏற்பட்டது. மெக்ஸிகோவின் மாகாணமான ஓக்ஸாக்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (US Geological Survey) தெரிவித்துள்ளது. இப்போதைக்கு, உயிர் அல்லது சொத்து சேதம் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. விரிவான தகவல்களுக்கு காத்திருக்கிறோம்.
READ | டெல்லி-என்.சி.ஆரில் மீண்டும் நிலநடுக்கம்; 2 மாதங்களில் 13வது முறை....மக்கள் பீதி
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில் இருந்தது. பூகம்பத்தின் நடுக்கம் தீவிரமாக இருந்ததால், இழப்புகள் அதிக அளவில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றன. பீதி காரணமாக மக்கள் வீட்டை விட்டு சாலைகளில் வெளியே வந்துள்ளனர். உள்ளூர் நிர்வாகம் ஒவ்வொரு சூழ்நிலையையும் கண்காணித்து வருகிறது.
An earthquake of magnitude 7.4 on the Richter scale hit Oaxaca, Mexico: US Geological Survey
— ANI (@ANI) June 23, 2020
READ | குஜராத்தின் பல பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்!
1985 இல் மெக்சிகோவில் 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரழிவில் குறைந்தது 5000 பேர் கொல்லப்பட்டனர். சொத்துக்கு கணக்கிடப்படாத நிலையில் சேதமடைந்தது.