கடந்த மாதம் மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கிய எகிப்து ஏர் நிறுவன விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து வரும் சமிக்ஞை போன்ற ஒலிப்பதிவு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீனக் கருவிகள் மூலம் அந்தசமிக்ஞை கண்டறியப்பட்டதாக பிரஞ்சு விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விமானம் 66 விமான பயணிகளுடன் விபத்துக்குள்ளானது.


இதைக்குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளானது இயந்திரக் கோளாறு மட்டுமின்றி பயங்கரவாதத் தாக்குதலும் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பதடுவதாக கூறியிருந்தனர் என்பது குறுபிடத்தக்கது.