டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் உலகமே திரும்பி பார்த்த எலன் மஸ்க்கின் பக்கம் அண்மை காலமாக ஊடகங்கள் தங்களது கழுகு பார்வையை செலுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் அவரது முதலாவது வாரிசான சேவியர் மஸ்க் தனது பெயரை மாற்றிக்கொண்டு, பாலினத்தையும் மாற்றிக்கொண்டார். பின்னர் அவரது தந்தையுடனான உறவை முறித்துக்கொள்வதாக சேவியர் தெரிவித்தார். இதனால் சில காலம் அவரது பேச்சு இணையத்தில் சுற்றி வந்தது.


பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் குழுவின் பெண் பணியாளரிடம் எலன் மஸ்க் தன் லீலைகளை காட்டியதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



அது வெறும் புரளி என்று கூறிவிட முடியாது. ஏன் என்றால் அப்பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு டெஸ்லா நிறுவனத்திடமிருந்து $250,000 தொகை அனுப்பப்பட்டதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.


இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், "மஸ்க் தனது சம்மதம் இல்லாமல் தனது காலை வருடியதாகவும், சிற்றின்ப மசாஜ் செய்வதற்கு ஈடாக ஒரு குதிரையை வாங்கித் தர முன்வந்ததாகவும்” என மஸ்க் மீது குற்றம் சாட்டினார். மேலும், மசாஜ் செய்யும் போது, ​​மஸ்க் தனது பிறப்புறுப்பை அப்பெண்ணிற்கு வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | மெக்காவில் கொரோனாவுக்கு மத்தியில் பாதுகாப்பான ஹஜ் யாத்திரை


இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் நீண்ட நாட்களாக எலன் மஸ்க் உறவில் இருந்து தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது. 



கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்தவர் ஷிவோன் சிலிஸ். பிறந்த 36 வயதான இவர் எலான் மஸ்க்கை முதன்முதலில் 2015இல் சந்தித்தார்.  பின்னர் இருவரும் ரகசியமாக உறவில் இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், கடந்த நவம்பர் மாதத்திலேயே இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும், அக்குழந்கைகளின் சான்றிதழ்கள் தற்போது வெளியாகி எலன் மஸ்க் தான் அவர்களது தந்தை என்பது நிரூபணம் ஆகியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.



இதற்கு முன்னதாக தனது முதல் மனைவியுடன் 5 குழந்தைகளையும், இரண்டாவது காதலியுடன் 2 குழந்தைகளையும் அவர் பெற்று 7 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்த இவர், தற்போது தனது 3ஆவது ரகசிய காதலியுடன் இரட்டை குழந்தைகளை பெற்று 9 குழந்தைகளுக்கு தந்தை ஆகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க | இந்த நாட்டு இஸ்லாமியர்கள் 2022ல் Hajj யாத்திரைக்கு செல்ல மாட்டார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR