எலான் மஸ்கின் அடுத்த அதிரடி... டிவிட்டரில் 2 மணி நேர வீடியோ பதியும் வசதி... அதிர்ச்சியில் Netflix - Youtube!
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் ட்விட்டர் பணியாளர்களை பெரிய அளவில் வேலையில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது நிர்வாகம் மற்றும் ட்விட்டர் தளத்தில் முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் ட்விட்டர் பணியாளர்களை பெரிய அளவில் வேலையில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார். இந்தியா உட்பட உலகம் முழுவதும் இது பயன்பாட்டில் உள்ளது. வலைதள பயன்பாட்டுக்கு ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ரூ.900 என டிவிட்டர் தளத்தின் மாதாந்திர சந்தா உள்ளது. அந்த வகையில் நீண்ட வீடியோ பதிவேற்றங்களை ஆதரிக்கவும், வீடியோ பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். டிவிட்டர் நிறுவனம் டிசம்பரில் நீண்ட வீடியோ பதிவேற்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
முன்னதாக, 60 நிமிட வீடியோவை பதிவேற்ற முடியும் என்ற வரம்பு இருந்த நிலையில் தற்போது அதை 2 மணி நேர வரம்பாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ப்ளூ டிக் பயனர்களுக்கான வீடியோகோப்பு அளவு வரம்பு 2ஜிபி என்ற அளவில் இருந்து 8ஜிபி என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களும் இப்போது 2 மணி நேர வீடியோக்களை டிவிட்டர் கணக்கில் பதிவேற்ற முடியும் என்றும், அதற்கான வரம்பை 8 ஜிபி வரை அமைக்கலாம் என அறிவித்துள்ளதை அடுத்து, பல பயனர்கள் திரைப்படங்கள் மற்றும் அதிகமான வீடியோக்களைப் பதிவேற்ற உற்சாகமாக இருந்ருக்கின்றனர். எனினும், 2 மணிநேர நீளமான வீடியோக்களை யார் பார்ப்பார்கள். அதற்கு வரவேற்பு இருக்குமா என்று பலர் இன்னும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | உளவு பார்க்கும் WhatsApp... அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!
இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட வீடியோ பதிவேற்ற அம்சத்தைப் பயன்படுத்தி, பாட்காஸ்ட் போன்ற நிகழ்ச்சிகளை, பல சேனல்கள் ட்விட்டரில் பதிவேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முழு நீள திரைப்படங்களையும் ட்விட்டரில் நேரடியாக சில பதிவேற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, நெட்பிளீக்ஸ் மற்றும் யூட்யூப் போன்றவற்றிற்கு சவாலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ட்விட்டரில் பதிவிவும் வார்த்தைகளை அளவினை பொருத்தவரை, முன்னதாக, ட்விட்டரில் 140 எழுத்துக்கள் (character) வரை மட்டும் பதிவுகள் இட அனுமதி தந்த ட்விட்டர், பிறகு அத வரம்பு 280 என ஆனது. இப்போது ட்விட்டர் ப்ளூ டிக் பெற்றவர்கள் 10,000 character வரை பதிவிடலாம். இதனால், முகநூலில், இருந்து பலர் ட்விட்டருக்கு நகர்ந்திருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் சுமார் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ள நிலையில், இது குறித்து கடந்த மாதம் எலான் மஸ்க் பேசியிருந்தார். அப்போது அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் தளத்தில் நமது கருத்துக்களை மிக சுருக்கமாக சொல்லும் நிலை தான் இருந்து வந்தது. பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். எனினும், ‘ட்விட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும் என்ற அமசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமாகியது. மேலும், இந்த ட்வீட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மும்பை தாக்குதலில் ஹெட்லிக்கு உதவிய ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ